Wednesday 24 December 2014

திருவெம்பாவை - பாதாளம்

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

பாதாளங்கள் ஏழிற்கும் கீழே சென்று சொல்வதற்கு எட்டா

வகையில் ஈசனின் மலர் பாதங்கள் உள்ளன; சிவனின் ஜடா

முடி மலர்கள் நிறைந்தது அவரது பொருட்கள் எல்லாமுமே

எல்லாவற்றின் எல்லை கடந்தும் இருக்கிறது அவன் மாதொரு

பாகன்; அவனது திருவுருவங்கள் ஒன்றிரண்டல்ல! வேதங்கள்

முதலாக விண்ணவரும் மண்ணவரும் துதிக்கின்ற போதும் எந்த

ஒருவராலும் இவனே சிவன் என சொல்லப்பட முடியாதவன் ஒரே

துணைவன்,தொண்டர் உள்ளத்தில் இருப்பவன்; சிவாலயப் பணி

புரியும் குற்றமற்ற குலப் பெண்களே! சிவனுக்கு ஊர் ஏது?பேரேது?

உற்றார் யார்? மற்றார் யார்? அப்படிப்பட்டவனை பாட வழியின்றி

இருக்கின்றோம் எம்பாவாய்.

பாடல்: 10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலு
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;

கோது - குற்றம்; பரிசு - வழி.



No comments:

Post a Comment