Tuesday 23 December 2014

திருவெம்பாவை - முன்னைப் பழம்பொருட்...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

பழம்பொருட்களுக்கெல்லாம் பழம்பொருளாக இருக்கும் 

பரம்பொருளான முதல்வனே! இப்போதுள்ள புதுமைகள்

அனைத்திற்கும் புதுமையான புதுமைச் சித்தனே! உன்னை

எங்கள் பிரானாகப் பெற்று நேர்த்தியுடன் வணங்கும் அடியார் 

நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம், 

அவர்களிடமே நட்பாவோம், அத்தகையவரையே நாங்கள் 

மணந்து கொள்வோம்,அவர்கள் சொற்படியே நடந்து அவர்க்கு

அடியவராய் பணி செய்வோம் இவ்வாறே எங்களுக்கு எம் ஈசன் 

அருள் செய்தால் எங்களுக்கு எந்த ஒருக் குறையும் இல்லை..

என்கிறோம் எம்பாவாய்.

பாடல்: 09

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை


No comments:

Post a Comment