Tuesday 16 December 2014

திருவெம்பாவை - முத்தன்ன வெண்ணகை..

#திருவெம்பாவை_எளிய_தமிழில்

(தோழியர்)

முத்து போல் ஒளி வீசும் புன்னகை அணிந்த பெண்ணே 

எல்லோர்க்கும் முன்னெழுந்து என் அத்தன், ஆனந்தன்,

அமுதன் என வாய் இனிக்க தேன் சொல் பேசுவாய்! இன்று

என்னவாயிற்று உனக்கு? வா வந்து வாசல் கதவு திறவாய்.!

(படுத்திருப்பவள்)

பத்து குணம் கொண்ட பாசமிகு தோழியரே.! இறைவனின்

அடியாளாய் முதிர்ச்சி பெற்றவர்களே! என் நட்பை என்றும்

போற்றுபவர்களே!புதியவள் என் சிறுமையை நீக்கி என்னையும்

அடியார் ஆக்கிக் கொண்டாலென்ன.? அது குற்றமா.?

(தோழியர்)
பெண்ணே நீ ஈசனின் மேல் கொண்ட அன்பு எமக்குத்தெரியாதா?

உள்ளத்தில் ஒழுங்குள்ளவர் யாரேனும் நம் ஈசனை பாடாதிருப்பாரா?

எங்களுக்கு இதெல்லாம் தேவைதான்..எழுந்து வா எம்பாவாய்.


பாடல்: 03

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். 



  



No comments:

Post a Comment