Friday 19 December 2014

திருவெம்பாவை - மாலறியா..

#திருவெம்பாவை_எளிய_தமிழில்
 
நாரணணும் நான்முகனும் காண முடியா மலையை நாம்

அறிவோம் என எல்லாம் உணர்ந்தவர் போல் பொய்யாக

பேசும் பெண்ணே பாலும் தேனும் போல் தித்திக்கும் சொல்

பேசும் ஏமாற்றுக்காரியே கதவைத் திற! இம் மண்ணுலகும் 

விண்ணுலகும் எவ்வுலகும் அறிவதற்கு அரியவர் ஈசனின் திருக்

கோலமும் அவர் நம்மை ஆட்கொண்டு நம் குற்றங்களை நீக்கும்படி 

பெருமையையும் பாடி சிவனே! சிவனே! என்று நாங்கள் ஓலமிட்ட

போதும் நீ சற்றும் உணர்ச்சியற்றவள் போல இருக்கிறாயே! ஏலம்

போல் மணம் நிரம்பிய கார் கூந்தல் கொண்டவளே இதுவா உன் 

தன்மை எழுந்து வா எம்பாவாய்.

பாடல்: 05

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

No comments:

Post a Comment