Sunday 11 January 2015

தீனா - ஜனவரி (2)

"தீனா கொரலு"

இன்னொர்த்தரு பண்ற தப்பு நம்க்கு ராங்கா தெர்ஞ்சா மேறி நாம செய்யற தப்பும் நம்க்கு ராங்கா தெர்யணும் அப்படி நெனிக்கிறவன் தான் ஆரையும் போட்டுக் குடுக்காது நிம்மிதியா வாழ மிடியும்.! "நீயே செஞ்சாலும் குறை.. அப்டி நென்ச்சா தான் வாழ்க்க நிறை" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : புறங்கூறாமை : குறள் எண் : 190 ]


"தீனா கொரலு"

ஒரு வேலய செய்ய சொல்லோ அந்தய வேலய வச்சே இன்னொரு வேலயும் கில்லியா முடிக்கிர்து இன்னா மேறி தெரிமா? இந்த யான கீதே அத்த அடக்கி புட்ச்சுட இன்னொரு கும்கி யானய இட்டாந்து புடிக்கிறா மேறி.! "யானய வச்சே யானயப் புடி.. வேலைய வச்சே வேலைய முடி" சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

[ பொருட்பால் : அதிகாரம் : வினைசெயல்வகை : குறள் எண் : 678 ]



No comments:

Post a Comment