Thursday 8 January 2015

பிரியாணியின் கதை...

#அக்பர்_காலத்தில்_நடந்தது

அக்பர் வித விதமாக உணவுகள் உண்ணுவதிலும் மிக ரசனை மிக்கவர். தினசரி அசைவ உணவு... அதிலும் புதுப்புது ரெசிபிக்கள் கண்டு பிடிக்க ஒரு 11 பேர் கொண்ட குழுவே வேலை பார்த்தனராம்!

அவள் விகடனோடு இலவசமாகத் தரும் 16 பக்க ரெசிபி புத்தகம் போல 10 வருடங்கள் கொடுத்தால் எத்தனை புத்தகம் வருமோ அதைவிட 10 மடங்கு அதிக ரெசிபிக்கள் கண்டுபிடித்தும் அவரது உணவுப்பசி அடங்கவில்லையாம்.!

தலைமை சமையல்காரர் கொஞ்சம் ஆடிப்போய் என்னா நாக்குய்யா இந்தாளுக்கு என்று சலித்துக் கொள்ளும் அளவுக்கு அக்பரது உணவு ரசனை இருந்ததாம். சமையல்காரர் ஆப்கானின் காபூல் நகரை சேர்ந்தவர்.. சொந்த ஊர் போக ஆசை.

வாக்கப்பட்டு வந்த பெண் கூட வருடத்தில் 3 முறையாவது அம்மா வீட்டுக்கு போகலாம்..ஆனால் இவர் வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.. கிட்டத்தட்ட வனவாசம் மாதிரி சமையலறை வாசம். லீவும் சாங்ஷன் ஆகவில்லை.

ஒரு நாள் மன்னரிடம் இருந்து ஒரு உத்தரவு.. இது வரை நான் ருசிக்காத அளவுக்கு ஒரு உணவை தயாரித்தால் 13 வருட போனசுடன் 6 மாதம் விடுமுறை.! இல்லாவிட்டால் 5 ஆண்டு ஜெயில்!

சமையல்காரருக்கு ஜெயில் ஒன்றும் பெரிதாக பயமுறுத்தும் தண்டனை அல்ல. (ஆல்ரெடி13 வருஷம் அது தானே) 13 வருட போனஸ் 6 மாத விடுமுறை என்ற அறிவிப்பு தான் அவரை குஷியாக்கியது.

இரவு பகல் பாராது வெறி பிடித்தது போல் புதுசு புதுசாக சமைத்து அனுப்ப துவங்கினார்.. ஆனால் அக்பரோ இது போன வாரம் செய்த மீன் வறுவல் மாதிரி இருக்கு..இது ரம்ஜானுக்கு சாப்பிட்ட சுக்கா மாதிரி இருக்கு.. இந்த சிக்கன் தான் எப்பவும் சாப்பிடுறனே.. இது என்ன மூளை ரோஸ்ட் கொழ கொழன்னு.. சூப் சூடாவே இல்லை..

என்று கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்தாரே ஒழிய அவரிடமிருந்து லைக்ஸ் விழவே இல்லை.! இந்தக் கொடுமையை யாரிடமும் ஷேர் செய்ய முடியாத சமையல்காரர் மனதிற்குள் தன் புலம்பல் ஸ்டேட்டஸ்களை டர்ன் ஆஃப் நோட்டிபிகேஷன் வைத்து புலம்பிக் கொண்டிருந்தார்.

திடீரென தான் அந்த சோகச் செய்தி வந்தது..! இன்று மதிய சாப்பாட்டில் தான் எதிர்பார்த்த புதிய உணவுவகை சமைக்காவிட்டால் சமையல்காரரை உடனே சிறையில் அடைத்துவிடு என அக்பர் உத்தரவிட்டு இருப்பதாக.! சமையல்காரர் விரக்தி அடைந்தார் இனி இருப்பது 3 மணி நேரம்..!

மனம் போன போக்கில் சமைக்க துவங்கினார் கறித்துண்டுகளை கொதிக்கும் சோற்றில் போட்டு அரைத்த மசாலா கலவையை கொட்டி கிளறி பாத்திரத்தை நன்றாக மூடி வைத்து விட்டார்.. நன்றாக வெந்ததும் அந்த அடுப்பில் உள்ள தீயை குறைக்க எரியும் விறகுகளை வெளியே எடுத்தவர் என்னவோ நினைப்பில் அதை மூடி வைத்த தட்டுக்கு மேல் வைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தார்..! 1 மணி நேரம் ஆயிற்று.

மன்னருக்கு பரிமாறும் நேரம் பரிமாறும் பணியாளர்கள் அங்கு வந்து வியந்தார்கள் என்ன இது அடுப்பில் உள்ள எரிந்த விறகுகள் பாத்திரத்தின் மேல் இருக்கே சரி புது சமையல் போலும் என நினைத்து ஐயா உணவு ரெடியா.?

சமையல்காரர் இப்போது தான் சுயநினைவுக்கு வந்தார்.. திரும்பி பார்த்தால் பாத்திரத்தின் மீது விறகு..! அய்யய்யோ என்ன இப்படி செய்து விட்டேனே என அதிர்ந்து சரி நமக்கு ஜெயில் நிச்சயம் இவர்கள் முன் காட்டிக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்து ஆம் நண்பர்களே மன்னருக்கு உணவு தயார் எடுத்து செல்லவும்..

நான் சற்று ஓய்வில் என் அறைக்கு போகிறேன் என அறைக்கு திரும்பிய 15வது நிமிடம் அவர் அறை வாசலில் திபு திபுவென 15 வீரர்கள்..உடனே அழைத்து (இழுத்து) வரச் சொல்லி மன்னரிடம் இருந்து அழைப்பு என்று.. பதறியபடி கிளம்பினார்..

மன்னர் அறை நெருங்க நெருங்க அக்பர் கர்ஜிக்கும் குரல் காதில் விழுந்தது.. என்னடா சமையல் இது..எங்கே அந்த சமையல்காரன்.. ராஸ்கல் இப்படி பண்ணிட்டானே.. அவனை நான் சும்மா விடமாட்டேன் இதை கேட்டதும் சமையல்காரர் நடுங்க தொடங்கினார்.!

அறைக்குள் நுழைந்ததும் "ஹொசூர் இந்தப் பாவியை" என்று குரலெடுத்தவர் ஆவேசமாக ஓடி வந்து அவரைத் தழுவிக் கொண்ட அக்பரை கண்டு குழம்பிப் போனார்.. அவனது கன்னங்களில் முத்தமிட்டு அவன் கைகுலுக்கி அவன் தோளில் அறைந்து அக்பர் சிறு பிள்ளை போல குதூகலத்தில் இருந்தார்..!

அவரது உதடுகள் வாரேஹ் வா, அச்சா, சப்பாஷ் என்று உச்சரித்து கொண்டே இருந்தது.. எப்படியடா இப்படி ஒரு சமையல் செய்தாய்.. உண்மையில் நீ கலைஞனடா..அற்புதம்..இது தான் நான் சாப்பிட்டதிலேயே சிறந்த உணவு..இனி இது தான் நம் அரச உணவும் என்றார் குஷியுடன்.

என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே என்ற டயலாக் உலகில் அந்த சமையல்காரருக்கு தான் வந்திருக்கும் போல.. சற்று முழித்தார் அப்போது தான் உணர்ந்தார் அந்த அறையெங்கும் இதுவரை அவரே அறிந்திராத... __மனம் விரும்பும் வகையில் கும்மென்று மசாலா மணம் வீசுவதை.!

நம்பமுடியாமல் டைனிங் டேபிளை பார்த்தார் அந்த உணவினை கிட்டத்தட்ட மொத்த மன்னர் குடும்பமே அமர்ந்து ராஜ்கிரண் ஸ்டைலில் ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிருப்பதை.. இப்போது தெம்பு வர மன்னா நன்றாக இருந்ததா? என்றார்.

நன்றாகவா.. அற்புதம் ஏதோ பாத்திரத்திற்கு அடியிலும் பாத்திரத்திற்கு மேலும் நெருப்பு மூட்டி சமைத்தாயாமே பணியாளர்கள் சொன்னார்கள் இன்று நம் அரண்மனையில் இரவுக்கும் இதே உணவு செய்.. நாளை முதல் உனக்கு ஓராண்டு விடுமுறை 26 வருட போனஸ் போய்வா என்றார்.

இதைக்கேட்டு அகமகிழ்ந்த சமையல்காரரும் ஆனந்தமாக மன்னரை வணங்கி விடைபெற்றார்..

நண்பர்களே சிரத்தையின்றி ஏனோ தானோ என்று குருட்டாம் போக்கில் அந்த சமையல்காரர் செய்த உணவு தான் #தம்_பிரியாணி

No comments:

Post a Comment