Monday 5 January 2015

தீனா-2015

"தீனா கொரலு"

ஒரு பொண்ண லவ்வு உட்டு அப்பால அத்த பிர்ஞ்சு போயி மன்சு பூரா பேஜாராயி இர்க்க சொல்லோ.. சில பேர் நம்மள பாத்து சிர்ச்சிகினே போவாங்கோ.. அந்த தத்திங்க ஆருக்கும் லவ்வுன்னா இன்னான்னும் தெர்யாது.. பிரிஞ்சு இர்க்குற வேதனயும் பிரியாது..! "லவ் பண்ணாதான் தெரியும் சிறப்பு.. லவ் பண்ணாதவனுக்கு அல்லாமே சிரிப்பு... " குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நாணுத்துறவுரைத்தல் : குறள் எண் : 1140 ]


'"தீனா கொரலு"

நம்ம வூட்டுக்கு விர்ந்தாளிங்கோ வர் சொல்லோ வூட்ல இர்க்க நாஷ்டாவை பர்ஸ்ட்டு அவுங்களுக்கு துண்ணக் கொட்த்து மிச்சம் இர்ந்தா தான் நாம துண்ணணுமாம்! அப்டியா பட்டவன் அவன் சொந்த நெலத்துல விதையே போடலின்னாலும் கூடொ நல்லாவே இர்ப்பானாம்.! "விர்ந்தாளி துண்ணனும் பர்ஸ்ட்டு.. அப்டி நென்ச்சா வாழ்க்க பெஸ்ட்டு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : விருந்தோம்பல் : குறள் எண் : 85 ]


"தீனா கொரலு"

நம்ம கிட்ட கீற பவரு இன்னான்னு தெர்ஞ்சுக்காம டக்குன்னு பீலாகி அவசர அவசரமா ஒரு வேலைய செய் சொல்லோ.. அந்த வேலை ஒயுங்கா மிடியாம பாதிலயே நின்னுபோயி அபீட் ஆனவங்க தான் ஜாஸ்தி.! "பலம் தெர்யாம இறங்காத.. பாதியில வுட்டுட்டு கிறங்காத" .. சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

[ பொருட்பால் : அதிகாரம் : வலியறிதல் : குறள் எண் : 473 ]




No comments:

Post a Comment