Friday 2 January 2015

திருவெம்பாவை - உங்கையிற் பிள்ளை..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

உன் கைக்குழந்தை உன்னுடைய சொல் கேட்டு அடங்கியிருக்கும்

என்ற பழமொழி உண்மையாகக்கூடாது என பயந்து ஈசனே உன்னை

ஒன்று கேட்கிறோம், சிவனன்பர் ஒருவரின் தோளில் தான் எங்கள்

மார்புகள் சாயவேண்டும் உன் அன்பில்லாதவர் எமக்கு வேண்டாம்.

பிற வேலைகள் செய்யாது எங்களது கைகள் சிவனுக்கு மட்டுமே 

தொண்டு செய்ய வேண்டும்.இரவும் பகலும் எம் கண்கள் வேறெதுவும் 

காணாமல் உன்னையே தரிசித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

எங்கள் கோமானே இந்த வரங்களை மட்டும் நீ எங்களுக்குப் பரிசாக

அருளிவிடு பிறகு சூரியன் எத்திசையில் உதித்தாலும் எங்களுக்கு 

கவலை ஏதும் இல்லை என்கிறோம் எம்பாவாய்.

பாடல்: 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 

கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.


No comments:

Post a Comment