Saturday 24 January 2015

ஒபாமா வந்தாச்சு - 4

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 4

(ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஒபாமா குழுவினர் சென்ற புடவைக்கடை மத்திய ஜவுளி அமைச்சகத்தால் போத்தீஸ் ஆரெம்கேவி போல செட் போடப்பட்டு அதி நவீன பாதுகாப்பு வசதிகளுடன் இருந்தது. இனி அந்த பிரத்யேக ஷோரூமில்....

வெல்கம் டூ அவர் இண்டியன் சில்க் ஷோரூம் என்ற அலங்கார டிஜிட்டல் பேனர்கள் வரவேற்க  உள்ளே நுழைந்தனர் ஒபாமா தம்பதியர்..நேராக புடவை பிரிவுக்கு போனார்கள்..அந்தப் பிரிவில் வந்ததும் உற்சாகத்தில் மிச்சேலே ஒரு பெரிய விசிலடித்தார்..புடவைகளில் இத்தனைரகங்களா.!இவ்வளவுவண்ணங்களா! வியப்பில் விழிகள் விரிய பார்த்தவர், உங்க ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் இவ்வளவு சாய்ஸ் எங்க நாட்டில் கூட இல்லை என்றவரிடம்...

அட இதுவே அவங்களுக்கு திருப்தி தராதுங்க சேலை எடுக்க எங்க ஊர்ப்பெண்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையை கணவனை தேர்ந்தெடுக்ககாட்டியிருந்தால் நாங்க எப்பவோ வல்லரசாகி இருப்போம் என்றார் ஜவுளித்துறை அமைச்சர். ஓ இதுவே அவங்களுக்கு போதாதா.! ஆச்சர்யமா இருக்கே! என்றவர் மோடி படம் போட்ட புடவைகளை பார்த்து வியந்தார்.! என்ன உங்க ப்ரைம் மினிஸ்டர் படம் போட்டுருக்கு என்றார்.!

ஓ அதுவா எங்க பிரதமர் மக்களால் அதிகம் விரும்பப்படுபவர் என்பதற்காகவே.. இப்புடவைகளை தயாரிக்கிறோம் என்றார் ஜவுளி அமைச்சர்.! அப்படின்னா அவரைப் புடிக்காதவங்க வாங்கி தொவை தொவைன்னு தொவைச்சா என்று மனதில் எழுந்த கேள்வியை நமட்டு சிரிப்போடு அடக்கிக் கொண்டு எங்கே உங்க பிரதமர் என்றார்..! அவர் அதோ அடுத்த பிரிவில் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி ஆகும் புடவைப் பிரிவை பார்வையிடப் போயிருக்கிறார் என்றதும்..

ஒபாமாவுக்கு வியப்பு!என்ன பாகிஸ்தானுக்கு தயாராகும் புடவையா.! அதிலென்ன சிறப்பு என்று ஒபாமா கேட்க.. நானே சொல்றேன் என்றபடி அங்கு வந்தார் மோடி. மிஸ்டர் ஒபாமா நாங்க பாகிஸ்தானுக்கு தயாரிப்பது எல்லாமே "பார்டர்"வைத்த புடவைகள்!பார்டர் இல்லாத புடவைகளை அங்கு அனுப்புவதில்லை  பார்டரை மீறக்கூடாது என்ற அர்த்தம் பொதிந்த எச்சரிக்கைப் புடவைகள் அவை என்றார்.

அட..! பார்டரை வைத்து பார்டருக்கே பாடமா.! ஒரு பட்டுச்சேலையின் பார்டரில் பாரதத்தின் பார்டர் பிரச்சனையை மறைமுகமாக சொல்லி எச்சரிக்கும் உங்க ஐடியா சூப்பர் என்றார் ஒபாமா. இதென்ன பிரமாதம் இதோ உங்கள் மனைவிக்காக நாங்கள் தயாரித்த புடவை ரகங்களின் சிறப்பைக் கேட்டால் அசந்து விடுவீர்கள் என மோடி சொல்ல.. சொல்லுங்க என்றார் ஒபாமா.!

அந்த அதிரி புதிரி ரகங்களைஅவருடன் நாளை நாமும் கேட்க.. (தொடர்வோம்)


No comments:

Post a Comment