Friday 23 January 2015

ஒபாமா வந்தாச்சு - 1

பாமா வந்தாச்சு..!

(ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

அரசு முறை அதிகாரப் பூர்வமான அனைத்து சந்திப்புகளும் அன்று நிறைவடையும் நாள்.. இதோ இந்த மீட்டிங்கிற்கு பிறகு ஒபாமா இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டும்.! பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தார் ஒபாமா.. வழக்கம் போல் மிச்செல் ஒபாமா கடந்த 2 மணிநேரமாக ஒப்பனை செய்து கொண்டிருக்கிறார்.!

உலகம் முழுவதும் பெண்கள் அப்படித்தானே.. துண்டை மறந்து விட்டு தேடும் கணவனின் குரல் போல ஒபாமாவின் குரல் ஒலிக்கிறது டியர் இன்று கூட்டத்தில் பேசுவதற்காக தயாரித்து தந்த காகிதங்கள் எங்கே.? ஓ.அதுவா உங்கள் ஃப்ரீப்கேசில் தான் இருக்கு பாருங்க.. டிபிக்கல் இந்திய மனைவி போல பதில்.!

அடடா இல்லையே இது கடந்த முறை நான் பாகிஸ்தான் அதிபரோடு பேசிய கூட்டத்தின் காகிதங்கள் தான் இங்கிருக்கிறது என்றார் பதட்டத்துடன்.. வேகமாக உள்ளே நுழைந்தார் ஒபாமாவின் பி.ஏ"மிஸ்டர் பிரசிடெண்ட் மன்னிக்கவும் சிறிய தவறு நிகழ்ந்துவிட்டது இந்தியாவில் பேச வேண்டிய காகிதங்கள் மாறிவிட்டது....

என்றார் குற்ற உணர்வுடன், புல்ஷிட் ஏன் இப்படி இந்திய காங்கிரஸ் போல சொதப்புகிறீர்கள் இன்னும் 1 மணிநேரத்தில் மீட்டிங்.! எப்படி நான் தயாராவது.? என்றார் கோபத்துடன்.. கூல் மிஸ்டர் பிரசிடெண்ட் எனது பென் டிரைவில் அந்த பைல்கள் இருக்கிறது இன்னும் 20 நிமிடத்தில் பிரிண்ட் அவுட் வந்துவிடும் என்றார்.!

20 நிமிடமா.! இம்பாசிபிள்  எனக்கு 10 நிமிடத்தில் வேண்டும் அதை படிக்க வேண்டாமா.? எனது உரையை தயாரிக்க வேண்டாமா.? என்ன செய்வீர்களோ தெரியாது 10 என்றால் மிகச்சரியாக 10 நிமிடங்களில் வேண்டும் என்றார் ஒபாமா.
10 நிமிடத்தில் முடியாதே பிரசிடண்ட் என்று தலையை சொறிந்தார் உதவியாளர்.!

ஏன் முடியாது.? என்று ஒபாமா கேட்க.."பிரசிடண்ட் இங்கு நெட்டெல்லாம் செம ஸ்லோ.. நேற்று ஒரு 3 மணிநேர இந்திப்படத்தை பார்க்க டவுன் லோடு செய்தேன் அதற்கே 6 மணிநேரம் ஆயிற்று.. இப்போது கூட இதை 2 மணி நேரமாக முயற்சித்து கொண்டிருக்கிறேன் மன்னிக்கவும் என்றார்.! ஆத்திரமடைந்தார் ஒபாமா.!

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. நம் அமெரிக்க மக்கள் என்ன நினைப்பார்கள்.? ஒரு அமெரிக்க அதிபர் திட்டமிடாது பேசுவதா.? இது வரலாற்று பிழை அல்லவா.? எப்படி இந்த அவப் பெயர் நீங்கும்.? என்று படபடத்தார்.. அப்போது "கூல் டார்லிங் நான் ஒரு ஐடியா சொல்லவா என்றார் மிச்சேல்.!

என்ன ஐடியா நம்பமுடியாதது போல திரும்பினார் ஒபாமா.? நீங்கள் தற்போது வைத்திருக்கும் பைல் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசியது என்று தானே சொன்னீர்கள் ஆமாம் என்றார் ஒபாமா.. அப்ப வெரி சிம்பிள் இந்த பைலில் எங்கெல்லாம் பாகிஸ்தான் என்று வருகிறதோ அங்கெல்லாம் இந்தியான்னு போட்டுக்கோங்க.!

எங்கெல்லாம் இந்தியான்னு வருதோ அங்கெல்லாம் பாகிஸ்தான்னு போட்டுக்கோங்க மேட்டர் ஓவர் என்றார் குணா பட கமல் போல.. இதைக்கேட்ட  ஓபாமாவும் அபிராமி அபிராமி ஸ்டைலில் மிச்சேலு மிச்சேலு என்று கூவி கட்டிக் கொண்டார். மேடத்தின் ராஜதந்திரத்தை பார்த்தால் அடுத்த அதிபராகக் கூட வரலாமே என்று உதவியாளர் தம் பங்குக்கு ஜிங் சாக் வார்த்தைகள் உதிர்த்தார்.

சரி நேரமாகி விட்டது எனக் கூறி மீட்டிங்கிற்கு ஓபாமா கிளம்ப.. இனி அங்கு சந்திப்போம்...

( தொடர்வோம்)

No comments:

Post a Comment