Saturday 3 January 2015

குடியானவனின் குமுறல்..

ஆத்துல மண்ணள்ளி அதை சுரண்டியாச்சு..
விளையிற நெலமெல்லாம் வீடாக போச்சு... 
ஏரி கம்மா குளமெல்லாம் ஆக்ரமிப்பாச்சு...
தோண்டி வச்ச கிணறு கூடகாணாம போச்சு..
பாறை கூட பளிங்குன்னதும் வெடிய வச்சாச்சு..
மலையக்கூட சில்லுசில்லா பேத்தெடுத்தச்சு
சேத்துல தான் காலை வைக்கும் வேலையும் 
போச்சு..திங்க சோறில்ல எங்களுக்கு தெருவில் 
நின்னாச்சு.. வெள்ளைக்கார முதலாளியை அழைச்சு 
வந்தாச்சு..சின்ன சின்ன பொழப்பு கூட முடங்கியே 
போச்சு..கடனை உடன வாங்கிறதே வேலையாயிடுச்சு..
இப்ப எதுவுமில்ல எங்க கிட்ட எல்லாமே போச்சு.. 
கள்ளப்பணம் கறுப்புப்பணம் எங்கதான் போச்சு..கேட்டு 
கேட்டு அலுத்துட்டோம்யா விட்றானா மூச்சு.. அவன் ஓட்டு
கேக்க வந்தப்பல்லாம் இனிச்சது பேச்சு..கோவணத்துக்கு 
மாத்தில்லய்யா சொன்னதென்னாச்சு.. நாங்க வாழ என்ன 
வழியின்னு கேள்வி கேட்டாச்சு..அது செவிடன் காதில் ஊதி
புட்ட சங்காக ஆச்சு.. ஊழலில்லா ஆட்சின்னதும் சிரிப்பு 
வந்திருச்சி.. ஒண்ணு மட்டும் நிச்சயமா தெரிஞ்சியே போச்சு..
நாங்க ரோசத்தோட வாழுவது முடிஞ்சே போச்சு.. எங்க 
மிச்ச மீதி வாய்க்கரிசிக்கு மீத்தேன் வந்தாச்சு.

No comments:

Post a Comment