Saturday 3 January 2015

திருவெம்பாவை - போற்றி...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

முதலாக இருக்கும் உன் மலர்ப் பாதம் அருள் தரட்டும்! போற்றி!

முடிவாக இருக்கும் உன் செம்மலர் திருவடிகள் அருள் தரட்டும்! போற்றி!

எல்லா உயிர்க்கும் தோற்றம் தந்த உன் பொற்பாதங்களுக்கு! போற்றி!

எல்லா உயிர்க்கும் இன்பமாகும் உன் கழலடி கால்களுக்கு! போற்றி!

எல்லா உயிர்க்கும் இறுதியாக இருக்கும் உன்னிரு பாதங்களுக்கு! போற்றி

நாரணனும் நான்முகனும் காணாத உன் தாமரை பாதங்களுக்கு! போற்றி!

நாங்கள் உய்வுறுமாறு எம்மை ஆட் கொண்டருளும் பொன் மலரடிகளுக்கு! போற்றி

போற்றி போற்றி மார்கழி நீராடுவோம் எம்பாவாய்.


பாடல்: 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.
 (மாணிக்க வாசகர் அருளியது)


நிறைந்தது..

No comments:

Post a Comment