Thursday 8 January 2015

தீனா - ஜனவரி 2015

"தீனா கொரலு"

நான் அவுரோட ஒண்யா சேந்திருந்த ஒவ்வொர் நாளயும் மன்சால நென்ச்சிக்கினே தான் நான் உசுரோடயே இர்க்கேன்.! அப்பால வேற இன்னாத்த நென்ச்சு  நான் உசுரு வாழறது.. அத்து முடியவே முடியாத்து..! "உன்ய நென்ச்சு வாழறது தான் லைஃபு.. நீ இல்லாட்டி நான் யாருக்கு வைஃபு"? குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்

உற்றநாள் உள்ள உளேன்.

[ காமத்துப்பால் : அதிகாரம் : நினைந்தவர் புலம்பல் : குறள் எண் : 1206 ]


"தீனா கொரலு"

சிர்ச்ச மூஞ்சியோட சக்கரயா பேசிக்கினே மன்சுக்குள்ளாற நம்மள எப்படா கவுக்கறதுன்னு ஒட்டேரி நரி கணக்கா திங்க் பண்ற ஆள தோஸ்த்தா வச்சிக்க மெர்சலா கீதுப்பா.! "சிர்ச்சி கழுத்தறுக்கறவன் சங்காத்தம்.. எப்ப வோணா உனுக்கு சங்குதூம்" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்

[ பொருட்பால் : அதிகாரம் : கூடாநட்பு : குறள் எண் : 824 ]


"தீனா கொரலு"

சோறு தண்ணி துண்ணாம வவுத்து பசியை பொறுத்துகினு உண்ணாவெர்தம் இருக்க பெர்ய மன்சங்களை வுட பெர்ய மன்சன் ஆரு தெரிமா? கெட்ட கெட்ட வார்த்தயில பச்சயா பேஸ்னா கூடொ அத்த பொறுத்துகினு கண்டுக்காம போறான் பார் அவன் தான்.! "பசிய பொறுத்தவன வுடொ.. பழிய பொறுத்தவன் தான் பெரிவன்" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாசொல் நோற்பாரின் பின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : பொறையுடைமை : குறள் எண் : 160 ]

No comments:

Post a Comment