Saturday 24 January 2015

ஒபாமா வந்தாச்சு - 2

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 2 (ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஒபாமா மோடியுடன் நடந்த கூட்டத்தில் மிச்சேல் சொன்னது போல சமாளித்து அருமையாக பேசி பின்னர் மீட்டிங் முடிந்து மோடியுடன் வெளியே ஹாலுக்கு வருகிறார்..! அங்கு மொத்த கட்சியினரும் எம்பிகளும் கூடி நிற்க மோடி எல்லா அமைச்சர்களையும் எம்பிகளையும் அறிமுகப்படுத்துகிறார்...

மிஸ்டர் ஒபாமா இவர் தான் அமித் ஷா எனது ஆருயிர் நண்பர்.. இந்தியாவின் வளர்ச்சிக்கு நானும் கட்சியின் வளர்ச்சிக்கு இவரும் பாடுபடுகிறோம் என்று சொல்லி முடித்த வினாடி பக்கென்று சிரித்து விட்டார் நிதின் கட்காரி" மோடி அவரை முறைக்க அந்த சிரிப்பை கட்காரி அடக்க.. யார் இவர் என ஒபாமா கேட்க...

இவரா இவர் எங்க கட்சியின் முன்னாள் தலைவர் கொஞ்சம் அதிகபிரசிங்கியாக இருந்ததால் இவரை நீக்கிவிட்டோம் என்றார் அடுத்து அருண் ஜேட்லியை அறிமுகப் படுத்தினார்.. குங்ஃபூவுக்கு ஒரு ஜெட்லி.. எங்கள் கட்சியின் குங்குமம் போன்றவர் ஜேட்லி.! ஒத்தை ஆளாய் நின்று பலரை சமாளிக்கும் வித்தைக்காரர் என்றார்.!

அடுத்து சுப்ரமணியன் சுவாமி நின்று கொண்டிருந்தார்.. ஒபாமாவே சற்று ஒடுங்கி அவரை வணங்கினார்..அவர் காதருகே குனிந்து என்ன ஓய் பாகிஸ்தான் பிரதமர் கிட்ட பேசின அதே டேப் தான் இங்கேயும் ஓடித்தாமே என்றார் கிசு கிசுப்பாக.! அதிர்ந்த ஒபாமா என்ன சொல்வது எனத்தெரியாது விழிக்க.. சரி போமய்யா..

இதை நான் யார்கிட்டயும் சொல்லலை.. ஆனா அந்த ஆதாரம் எங்கிட்ட இருக்கு அதை மறந்துடாதேள்... பீ கேர் ஃபுல் என்று வழக்கம் போல எச்சரித்தார்.! ஓபாமா வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டு அங்கிருந்து மெல்ல நகர.. மோடியும் அடுத்து ராஜ்நாத்சிங், சுஷ்மாஸ்வராஜ், ஸ்மிருதிஇரானி,என ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தவர் அத்வானியிடம் வந்ததும் கொஞ்சம் திணறினார்.!

ஆனால் அவரை ஒபாமா ஏற்கனவே அறிந்து இருப்பதால் ஓ.. தெரியும் இவர் தானே அத்வானி நியாயமாக பார்த்தால் இவர் தானே இந்தியாவின்.. என ஆரம்பிக்க சட்டென்று..குறுக்கிட்ட மோடி..ஆமாம் நியாயமா இவருக்கு தான் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா தந்திருக்க வேண்டும்..!

ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் வாஜ்பாய்க்கு இன்னும் தராததால் இவருக்கு பத்மவிபூஷண் தர உள்ளோம் என்றார். ஆமாமா இங்க சீனியாரிட்டி அடிப்படையில தானே எல்லாம் நடக்குது என்று.. நக்கலாக நினைத்துக்கொண்ட அத்வானி.
என்னைவிட மோடி தான் பிரதமராகும் முழுத்தகுதி கொண்டவர் என்ற வெறுப்பான பதிலை சிரிப்போடு பொறுப்பாக உதிர்த்தபடி ஒபாமாவின் கையை குலுக்கினார்.!

மோடியும் என்ன செய்வது என்று விழிக்க அந்நேரம் சோனியா மன்மோகன் ராகுல் சகிதம் உள்ளே நுழைந்தனர்.! மோடி ஒபாமா அத்வானி மீது கொண்ட கவனத்தை திருப்ப அதோ எங்கள் எதிர்கட்சியினர்..! ஆனால் அந்த தகுதி இல்லாதவர்கள் வருகிறார்கள் என்று கிண்டலாக கூற.. இருக்கலாம் ஆனால் அவர்களும் முன்னாள் ஆட்சியாளர்கள் தானே அவர்களை மதிப்பதே மரபு கொஞ்சம் இருங்கள் என்று ஓபாமா சொல்ல.. இனி நாளை காங்கிரசாரோடு சந்திக்கலாம்... (தொடர்வோம்)


No comments:

Post a Comment