Saturday 24 January 2015

ஒபாமா வந்தாச்சு - 3

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 3 (ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஓபாமா சோனியா குழுவினரை நோக்கி வந்து வணக்கம் சொன்னார். கடந்த முறை என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய நீங்கள் இன்று எதிர்கட்சி கூட இல்லையே என்று வருத்தமாக ஒபாமா கேட்க.. சோனியா நோ மிஸ்டர் ஒபாமா உங்களுடன் பேச்சு வார்த்தைக்கு மன்மோகனை அனுப்பியது தான் நான் செய்த பெருந்தவறு.!

எப்படி என்றார் ஒபாமா? பேச்சு வார்த்தை எனும் போது மன்மோகனை அங்கு அனுப்பியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இவரெல்லாம் எப்படி பேசுவார் என்ற சந்தேகத்திலியே மக்கள் எங்களைத் தோற்கடித்துவிட்டனர் என்றவுடன், ஒபாமா மன்மோகனைப் பார்க்க அவரும் ஒரு ஞானி போல மெலிதாக புன்னகைத்தார்.

இவருக்கு பதில் எங்கள் கட்சியை சேர்ந்த நாசாவை அனுப்பியிருக்கலாம் என்று சோனியா சொல்ல.. என்ன நாசா உங்கள் கட்சியில் இணைந்து விட்டதா.! எனக்கு பெண்டகனில் இருந்து கூட இத்தகவல் வரவில்லையே.! என ஒபாமா வியக்க இது அந்த நாசா அல்ல எங்க கட்சி நாராயணசாமி என்றார் ராகுல்.! 

அவரை பார்த்து ராகுல் ஹவ் ஆர் யூ? என்றார் ஒபாமா.. ராகுலும்"ஐயாம் ஃபைன்" என்றவர் வாங்களேன் இன்று எங்களுடன் விருந்து சாப்பிடலாம் என அழைக்க.. குடிசையோ குடியரசுத்தலைவரோ யாராயிருந்தாலும் இவருக்கு உணவுதான் ஒரே குறிக்கோள் போல என எண்ணிக் கொண்டே நோ தேங்ஸ் என அதை மறுத்தார்.!

அந்நேரம் திபு திபு வென கூட்டமாக வந்தவர்கள் அப்படியே சாஷ்டாங்கமாக ஒபாமா காலில் விழ என்ன செய்வது.? இது என்ன புது மரியாதை.? இதற்கு பதில் மரியாதை எப்படி செய்வது.?என குழம்பிய ஒபாமா பதிலுக்கு அவர்களைப் போலவே செய்ய முடிவெடுத்து அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் காலில் விழப்போனார்.!

ஓடி வந்து ஒபாமாவை தடுத்தார் மோடி மிஸ்டர் ஒபாமா என்ன இது.? என்ன காரியம் செய்ய துணிந்தீர்கள்..! இது வேண்டாம் என்றார்.. இவர்களெல்லாம் யார் என ஒபாமா கேட்க இவர்களெல்லாம் தமிழக எம்பிக்கள் காலில் விழுவது என்பது இவர்கள் ஜீனிலேயே புரொகிராம் செய்யப்பட்ட விஷயம் என்றார்.!

ரோபோ டெக்னாலஜியில் கூட இப்படி ஒரு புரொகிராம் இல்லையே.. தமிழர்கள் மிகுந்த புத்திசாலிகள்(!?) என்று எண்ணியபடியே அவர்களுக்கும் வணக்கம் சொல்லி திரும்ப மிச்சேல் இப்போது உள்ளே நுழைய வர மோடி அவரை வரவேற்று.! வாங்கம்மா நாம் இப்ப புடவை கடைக்கு போறோம் ரெடியா என்றார்.! 

முதல்ல சேலைகளை பார்க்கணும்ன்னு மிச்சேல் சொல்ல.. ஒபாமா தன் புடை சூழ மோடியுடன் புடவைக் கடைக்கு கிளம்ப.. நாளை புடவைக் கடையில் சந்திக்கலாம்..

(தொடர்வோம்)

No comments:

Post a Comment