“கபில்தேவ் எனும் களநாயகன்”
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தை பலர் கபில்தேவ் 1983 உலகக்கோப்பையில்ஜிம்பாப்வே உடன் அடித்த 175* அடித்த ஆட்டத்தோடு ஒப்பிடுகிறார்கள்! கபிலின் ஆட்டம்ரொம்ப ஸ்பெஷலானது, தனித்துவமானது! அதை எந்த ஆட்டக் காரரின் ஆட்டத்துடனும்ஒப்பிடக் கூடாது! அதுபற்றி அறிய என்னோடு வாருங்கள்! பாஸ்போர்ட் விஸா ஏதுமின்றிENGLAND போவோம்!
இந்த அழகிய மைதானத்தை பாருங்களேன்! இது KENT எனும் இங்கிலாந்து கவுண்டியில்Tunbridge Wells என்னுமிடத்தில் உள்ளது. இந்த மைதானத்தின் பெயர் Nevill Ground, நம்ம திருப்பூர், திருப்பத்தூர் போல இங்கிலாந்தின் நாட்டிங் ஹாமில் உள்ளமைதானத்திற்கு Trent Bridge என்று பெயர்! நம் கபில் ஆடிய டன்ப்ரிட்ஜ் வெல்ஸ்மைதானத்தில் இதுவரை மொத்தமே..
இரண்டு சர்வதேச ஒருநாள் ஆட்டமே நடந்துள்ளது! மிகச் சிறிய மைதானம்! 6 ஆயிரம்நபர்கள் அமர்ந்து மேட்ச் பார்க்கலாம்! 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிரிக்கெட்ஆட்டங்கள் என்றாலே இன்றைய இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்றவை மோதினால் தான் கூட்டம்வரும்! ஆகவே 1983 உலகக் கோப்பை..
அட்டவணையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ், ஹெடிங்லி, மான்செஸ்டர், ஓவல், ஓல்டு டிராஃபோர்ட் போன்ற மைதானங்களை பெரிய அணிகள் மோதும் மேட்சிற்குதந்துவிட்டு ஆசிய ஆப்பிரிக்க அணிகளுக்கு மட்டும் டன்பிரிட்ஜ்வெல்ஸ் போன்றமைதானத்தை ஒதுக்கித் தந்தனர்! இங்கு KENT கவுண்டியின் கிரிக்கெட் மட்டுமின்றிஹாக்கி, கால்பந்து அணிகளும் இந்த மைதானத்தை..
குத்தகைக்கு எடுத்து ஆடிவந்தன! முதல் முறையாக இங்கு நடந்த சர்வதேச ஒருநாள்போட்டி இந்தியா ஜிம்பாப்வே மோதிய போட்டியாகும்! டன் பிரிட்ஜ் வெல்ஸ்இங்கிலாந்தின் அழகிய தோட்டங்கள் உள்ள ஊர்! இந்த மைதானமே பச்சைப் பசேலெனமரங்களும் பூஞ்செடிகளும் சூழ்ந்த மைதானம்! நல்ல குளிர் வீசும் கவுண்டியும் கூட ! இதற்கு நடுவில் கிரிக்கெட் ஆடுவதே..
தனி ஆனந்தமாக இருக்கும்! 1983 ஜுன் 18 அன்று மேட்ச் துவங்கும் நாளில் பி.பி.சிஒளிபரப்பு நிறுவனத்தில் ஏதோ பிரச்சனை என வேலை நிறுத்தம் அறிவித்தது! அதன்காரணமாக அந்த மேட்சை எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமும் அன்று படம்பிடிக்கவில்லை! அன்றைய மேட்சில் இந்திய விக்கெட்டுகள் மடமடவென சரிந்து கபில்ஆட வரும் போது ஸ்கோர் 17/5 என்றிருந்தது! கபிலின்..
அந்த வரலாற்றுப் புகழ் மிக்க ஆட்டம் எப்படி இருந்தது தெரியுமா? இந்த ஸ்கோரின்நடுவிலிருந்த / இந்த சாய்வுக் குறியை மட்டும் நீக்கி 175 அடித்தார் ருத்திர தாண்டவமாக! அன்று இந்திய அணி 78 ரன்கள் வருவதற்குள் மேலும் 2 விக்கெட்டுகள் இழந்தது! பின்னி, மதன்லால் உதவியுடன் 140 ரன்களைக் கடந்தார், அன்றைய மேட்சில் இந்திய அணிகொஞ்சம் பதட்டத்தில் ஆடும் டவுன்களை மாற்றி..
வழக்கத்திற்கு மாறாக கிர்மானியை கடைசி ஆளாக அனுப்பியது! அன்று 78 ரன்களில் 7 ஆவது விக்கெட்டாக விழுந்தது யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்ஓபனிங் பேட்ஸ்மெனும் ஆன ரவி சாஸ்திரி கடைசியில் கிர்மானி அவுட்டின்றி 24 ரன்கள்அடித்து கபிலுக்கு உறுதுணையாக நிற்க 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 175 நாட்அவுட் எனும் மெகா ஸ்கோரை..
அடித்திருந்தார் கபில்! அதுதான் அப்போதைய ஒரு நாள் ஆட்டத்தின் அதிகபட்சதனிநபர் ஸ்கோர்! காலையில் அங்கு வீசிய குளிர் காற்று அதனால் உண்டான ஸ்விங்இதனால் முதல் 5 விக்கெட்டுகள் தடாலென வீழ்ந்தன! கபில் களத்தில் நிலைத்த பின்புகுளிர் விட்டுப் போன அவரது அதிரடி பேட்டிங்கை பார்த்து இங்கிலாந்தின் குளிர் காற்றும்அலறி வழி விட்டது! நன்றாக யோசித்துப் பாருங்கள்!
40 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட்! தேர்ட் அம்பயர், DRS, பேட்ஸ்மென் ரிவ்யூ, பேட்டிங் & ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், பவர்ப்ளே, ஃப்ரீ ஹிட் என எந்த நவீன தொழில்நுட்பமும் அன்று கிடையாது. அம்பயர் அவுட் கொடுத்தா போயிட்டே இருக்கணும்! (மேக்ஸ்வெல்லுக்கு அவுட் தரப்பட்டது) ஒரு சின்ன தவறு செய்தாலும் அவ்வளவு தான்! மேலும் 83ஆம் ஆண்டில் ஒரு நாள் ..
கிரிக்கெட் என்பதே பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிது! 150 பந்துகளில் 50 ரன்கள் அடித்தாலே கொஞ்சம் நிதானமா ஆடுன்னு சொன்ன காலம் அது! அந்த காலத்தில்ஒருவன் வெறும் 138 பந்துகளில் 175 ரன்கள் அடித்தான் என்ற செய்தி வந்ததும் யாருடாஇந்த ராட்சன்னு எல்லாரும் வியந்தார்களாம்! முதன் முறையாக இப்படி ஒரு மேட்சைஒளிப்பதிவு செய்யாமல் போனோமே..
என்று பிபிசி வருந்தியது! செண்டிமெண்ட் நிறைந்த இந்திய அணியில் கபில் ஆடிக்கொண்டிருக்கும் போது வெங்க்சர்கார் ஒரு மரத்தடியில் நிற்க கடைசி வரை அவரைஅங்கிருந்து நகர விடவில்லை, ஶ்ரீகாந்தை சிறுநீர் கழிக்கக் கூட போகாதே என்றுநிறுத்தி, கவாஸ்கர் அமர்ந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்காமல் இப்படி நிறையசெண்டிமெண்ட் பார்த்தார்களாம்!
இன்னும் சொல்லப் போனால் கபிலின் இந்த ஆட்டத்தை பார்த்து தான் நமது மொத்தஇந்திய அணிக்கும் நாம இந்த உலகக் கோப்பையில் ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒருலட்சிய வெறி வந்ததாம்! தோல்வி நெருப்பு அணியைச் சூழ அதன் மீது நடந்த ஒருஉணர்வுப்பூர்வமான நெருப்பான பொறுப்பான ஆட்டம் அது! நான் இந்த இடத்தில்மேக்ஸ்வெல்லின் திறமையை, அதிரடியை..
குறை கூறவில்லை! கபிலின் ஆட்டத்தையும் மேக்ஸின் ஆட்டத்தையும் ஒப்பிடக் கூடாதுஎன்கிறேன்! கபிலின் ஆட்டம் பாரம்பரிய தெருக்கூத்து என்றால், மேக்ஸின் ஆட்டம்ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்! அது ரீசிவர் டெலிபோன், இது ஸ்மார்ட் ஐ போன், அது தந்திஇது SMS, இரண்டு காலகட்டங்களும் வேறு வேறு! இதை எப்படி ஒப்பீடுசெய்யக்கூடாதோ அப்படித்தான் இவர்கள்..
இருவரின் ஆட்டமும்! இன்றைக்கு இந்தியாவில் எல்லா மைதானங்களிலும் IPL மூலம் பலஆண்டுகள் ஆடி இந்த பருவநிலையையும் மைதானத்தின் தன்மையையும் மேக்ஸ்வெல்அறிந்திருப்பதை போல அன்று கபில் இங்கிலாந்தின் பருவநிலையில் பரிச்சயம்இன்றியே ஆடினார்! இருவரின் அதிரடி வேகத்தை, ரன் குவிக்கும் வெறியை, தனிஒருவனாக நின்று போராடிய..
குணத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம்! நிச்சயம் கபில் இங்கிலாந்தில் ஆடி அடித்த 175* மேக்ஸ்வேல் இந்தியாவில் அடித்த 201* இரண்டும் வெவ்வேறு காலத்தை சேர்ந்தவை! கபில் முதல் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் சேஸிங்கில்! இருந்தாலும் இங்கேமேக்ஸ்வெல்லுக்கு நிறைய வசதி, வாய்ப்புகள் இருந்தது! கபிலுக்கு அதுஇல்லை! ஆகவேஒப்பீடு செய்யவே முடியாதது கபிலின் ஆட்டமே!
#OWC2023n
No comments:
Post a Comment