#கனடா_உணவுத்திருவிழா { இப்போ தும்மினாத்தான்..)
🍖 🍔 WOK OF FAME RESTAURANT 🍞 🍗
இது எப்போ என்று ஆச்சரியப்படாதிங்க! 2017 ஆம் ஆண்டு நாங்க கனடா போயிருந்த போது மிஸிஸிகாவில் இருக்கும் இந்த சீன ரெஸ்டாரெண்டுக்கு ஜேம்ஸ் அண்ணன் எங்களை அழைத்துச் சென்றிருந்தார். ஒரு நபருக்கு 35 கனடிய டாலர்கள்! அன்னிக்கு இந்திய மதிப்பில் ₹1750 எத்தனை வகை உணவுகள் தெரியுமா?
நம்ம ஊர் உணவுத் திருவிழா ஆட்களெல்லாம் வெட்கித் தலை குனியும் படி 750 வகை உணவுகள்! வெளிநாடுகளில் இதுபோல இருப்பவை சீன ரெஸ்டாரெண்ட்டுகளே! 750 வகை உணவுகள் இருக்கு உங்களுக்கு விருப்பமானதை நீங்க எடுத்து சாப்பிடலாம் என்பதே கான்செப்ட்! இங்கு பார்சல் மட்டும் ஸ்டிரிக்டா இல்லை!
இந்த ஒரு கண்டிஷன் தவிர வேறெந்த கண்டிஷனும் இல்லை! 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசம்! 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாதிக் கட்டணம்! இது ஆண்டு முழுவதும் நடக்கிற கடை! அங்குள்ள பஃபே உணவுகள் தவிர 6 லைவ் கவுன்ட்டர்களும் இருக்கு! விதவிதமான முட்டைகளுக்கு மட்டும் ஒரு தனி ஸ்டால்!
ஆம்லெட்டுகள் மட்டுமே 25 வகைகள்! எக் வெரைட்டிகள் தனி! பான் கேக் & வேஃபல்ஸ் 10 வகைகள், ஸ்டார்ட்டர் மட்டுமே சைவம் அசைவம் இரண்டிலும் சேர்த்து 125 வகைகள்! 100 வகையான ஐஸ்க்ரீம்கல், 100 வகையான சாலட்டுகள், 100 வகையான டெஸர்ட்டுகள், வெஜ் & நான் வெஜ் சூப்கள் மட்டும் 20 வகைகள்.
அண்ணா.. அடச்சே ஆடுன்னு எடுத்துகிட்டா போயர், கிக்கோ, ஸ்பானிஷ், சவன்னா, மயோடோனிக், லாம்ப், வெள்ளாடு, செம்மறி ஆடு, மங்கோலிய ஆடு, சீன ஆடுன்னு 10 வகை ஆடுகள். மீன்களில் 50 வகை இறால்களில் 10 வகை லாப்ஸ்டர்களில் 10 வகைன்னு பிரமிப்பான உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தனர்.
பசுவோடு சேர்ந்த பன்றிகளும் இறைச்சியாக பல வகைகளில் இருந்தன! பழரசங்கள் 150 வெரைட்டிகள். இதன் பிறகு அரிசிச் சோறு வகைகள், பராத்தா, சப்பாத்தி, நான் ரொட்டி, பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ்னு பலப்பல வகைகள்! இதை எல்லாம் அந்த ரெஸ்டாரண்டில் ஒரு ரவுண்டு பார்த்தற்கே பசி தீர்ந்துவிட்டது!
நாங்கள் போனது வார நாட்களின் மதியத்தில். வார இறுதியில் என்றால் சாப்பாடு 50 டாலர்கள். டேபிள் ரிசர்வ் செய்துதான் சாப்பிட வரமுடியும். கனடியர்கள் மிகச்சரியாக மதியம் 12 மணிக்கு வந்து மாலை 3:30 வரை பொறுமையாக ரசித்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்! அங்கு மரியாதையுடன் விழித்துக் கொண்டிருந்த..
எங்களுக்கு நல்வழிகாட்டியாக ஜேம்ஸ் அண்ணன் இருந்தார். தம்பிகளா நம்ம ஊரில் உள்ள மட்டன், சிக்கன், மீன், இறால் வகை பக்கம் போயிடாதிங்க! ஸ்பானிஷ் ஆடு, க்யூபா கோழி, டைகர் லாப்ஸ்டர்னு எடுங்க! பழங்கள் கூட லிச்சி, ப்ளூபெர்ரி இப்படி வெளிநாட்டு பழங்களா போங்க! ஐஸ்க்ரீமும் அப்படியே என்றார்.
பொதுவாக புள்ளி வைத்தாலே கோலம் போடும் நான் அண்ணன் போட்டுத் தந்த ரோட்டில் எட்டே போட ஆரம்பித்தேன். மதியம் 1 மணிக்கு போன நாங்கள் ப்ளீஸ் கெட்டவுட் ஜெண்டில்லெஸ் மேன் என்று அந்த ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்களால் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேறிய போது கனடாவில் மாலை 4:30
பீஃப், மட்டன், சிக்கன், பாஷ் ஃபிஷ், இறால், லாப்ஸ்டர் என வயிற்றுக்குள் ஒரு மிருகக்காட்சி சாலையே இருந்தது! அதிக பட்சம் சாப்பிட்ட உணவுகள் 35 வகையைத் தாண்டாது! இதில் 20 வகை உணவுகள் ஊறுகாய் அளவே ருசித்தேன். என்ன இந்த 1750 ரூபாய் உணவை 100 ரூபாய் பீங்கான் தட்டில் தந்தது மட்டும் தான் குறை!
(ஒரு வெள்ளித் தட்டு தந்திருக்கலாம்)
ஏவ்வ்வ்வ்
No comments:
Post a Comment