Tuesday, 21 January 2025

Norway Smoking

 #ஸ்மோக்கிங்_ஸ்வெட்டிங் 


2010 ஆம் ஆண்டு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் கலை நிகழ்ச்சிக்காகசென்றிருந்தோம்நாங்கள் அங்கு சென்றிருந்தது டிசம்பர் மாதம்தலைநகரம்சினிமாவில் வடிவேலுவிடம் வெயில் நேரத்துல எதுக்கு வெந்நீர் கேட்குறிங்க என்றுடீக்கடைக்காரர் கேட்க வடிவேலு வெறியேத்தத்தான் என்பார்அதே வெறியை..


ஏற்றும் நோக்கத்தோடு நாங்களும் பனி பொழியும் நார்வேவுக்கு பனிக் காலத்தில்போயிருந்தோம்அங்கே மைனஸ் 30 வரை எல்லாம் சர்வ சாதாரணமாக வெப்பநிலைஇருந்ததுஉடலில் தெர்மல்வியரோடு 10 கிலோ எடையுள்ள ஆடைகள் அணிந்தும்பற்கள் டைப் அடித்தனகிளவுஸை கழட்டினால் விரல்களில் தேள் கொட்டியது


நாங்கள் இந்தியாவில் இருந்து ஸ்விட்சர்லாந்தில் வந்து இறங்கி சாலை வழியில் ஜுரிச்போய் அடுத்த நாள் விமானத்தில் ஜெர்மனியின் பெர்லின் போய் அங்கிருந்து இன்னொருவிமானத்தில் நார்வேயின் ஓஸ்லோ பயணம்தலையை சுற்றி மூக்கை அல்லதொந்தியைச் சுற்றி தொப்புளைத் தொடும் பயணம்! ‘சுற்றுபயணம் என்று..


இதைச் சொன்னால் அது அப்படியே பொருந்தும்ஸ்விஸ்ஸில் ஜெனீவாஃப்ரீட்பெர்க்ஜுரிச்லுஸான்ஜெர்மன்நார்வே என நாங்கள் கால் வைத்த எல்லா ஊர்களும் நாடுகளும்உஜாலாவுக்கு மாறியிருந்தனபோகுமிடமெல்லாம் பனி ஏராளமாக கொட்டிக்கொண்டிருந்ததுஇந்த மொத்தம் 3 நாட்கள் பயணத்தில்.. 


நான் 3 சிகரெட்டுகள் மட்டுமே குடித்திருந்தேன்தினமும் சாதாரணமாக 3 பாக்கெட்சிகரெட்டுகள் குடித்து பழக்கப்படுத்திய என் நுரையீரல் வீ வாண்ட் சிக்ஸர் எனஸ்டேடியத்தில் குரல் கொடுக்கும் தோனி ரசிகர்கள் போல  வாண்ட் நிகோடின் எனகூக்குரலிட ஆரம்பித்தனஅந்த கூக்குரலை..


தாங்க முடியாமல் பெர்லின் ஏர்போர்ட்டில் தனி ஒருவனாக ஸ்மோக்கிங் ரூம் தேடிஅலைந்து நார்வே விமானத்தை தவறவிட இருந்தது தனி எபிஸோடுஒரு வழியாகஓஸ்லோ வந்தடைந்தால் எங்களை கூட்டிச் செல்ல வரும் கார் பனிப் பொழிவில் சிக்கிக்கொண்டதால் 1 மணி நேரம் ஆகும் என்றனர்ஓஸ்லோ..


ஏர்போர்ட் வாசலில் எல்லார் வாயிலும் புகை வந்து கொண்டிருக்க அவர்களிடம் சென்றுலைட்டர் ப்ளீஸ் எனக் கேட்டு பல்பு வாங்கினேன்ஏன்னா அது சிகரெட் புகையல்லபனியால் வந்த புகைஜெர்கினில் வைத்திருந்த சிகெரெட் பாக்கெட்டை எடுக்க கைவிட்… அய்யோ என்னய்யா கிணத்தைக் காணோம்ஆம் சிகரெட் பாக்கெட்டை..


 எங்கோ தவறவிட்டு விட்டேன்நார்வே நாட்டின் சமபங்கு இட ஓதுக்கீட்டின்படி ஆண்பெண் இருவருமே சர்வ சாதாரணமாக அங்கு தம்மடிக்க ஆரம்பித்து இருந்தனர்அவர்களிடம் போய் ஒரு சிகரெட் கடன் கேட்கவும் தயக்கம்! 60 நிமிடங்கள் 60 யுகங்களாக கழிந்து கொண்டிருக்க முன்னைப் பிறவியில் நான் செய்த புண்ணியத்தில்.. 


என் அருகே வந்து நின்ற ஸ்வீடன் நாட்டுப் பெண் ஒருவர் தனது சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு அருகே ஆடு திருடியது போல முழித்துக் கொண்டிருந்த என்னைப்பார்த்து யூ வாண்ட் சிகரெட் என்ற போது பாரதி பாடிய தேன் வந்துப்பாய்ந்தது காதில்யெஸ் ப்ளீஸ் என்று கத்திவிட்டேன்அவள் தந்த சிகரெட்டை பற்ற வைத்து.. 


ஆழமாக புகையை இழுத்து என் நுரையீரல் அறைகளை நிரப்பிய அந்நொடியில்எங்களை கூட்டிச் செல்லும் கார் வந்ததுஎன் லக்கேஜை நகர்த்தும் அவசரத்தில் டிராலிசூட்கேஸின் நீண்ட கைப்பிடியில் மோதி என் மனம் போலவே ரெண்டாக உடைந்து கீழேபனியில் விழுந்து நனைந்து அணைந்தது அந்த சிகரெட்


மூன்று தினங்கள் சிகரெட்டை நிறுத்தியதை விட ஒரே ஒரு பஃப் அடித்து நிறுத்தியதுபெரும் இம்சையாக இருந்ததுஒரு வழியாக ஓஸ்லோ போய் நாங்கள் தங்கியிருக்கும்வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு அங்கு யாராவது சிகரெட் வைத்து இருக்காங்களான்னுகேட்டா ஒருவரும் இல்லை என்றனர்அருகில் சிகரெட் எங்கு கிடைக்கும்.. 


என்றேன்அந்த வீட்டில் இருந்து இறங்கி வலது புறம் திரும்பி நேராக 1 கி.மீ நடந்தால்சிகரெட் கிடைக்கும் என்றனர்வெளியே மைனஸ் 14 என்றது வானிலைஜெர்கின்குல்லாய்கிளவுஸ் சகலமும் அணிந்து புலன் விசாரணை கேப்டன் கெட்டப்பில்நடந்தேன்! 2 கி.மீ தூரத்தை தவறாக 1 கி.மீ என்று சொல்லிய அந்த வேண்டப்பட்டவிரோதியை.. 


நினைத்துக் கொண்டு 20 சிகரெட் உள்ள பாக்கெட் ஒன்றை வாங்கி அங்கேயே 2 சிகரெட்டை காலி செய்தேன்திரும்பி நடந்த 2 கி.மீ தூரத்துக்கு மேலும் 2 சிகரெட்நாம்தினமும் 1கி.மீ நடந்தால் நமது ஆயுளில் 1 நாள் கூடுமாம்அதுவே 1 சிகரெட் குடித்தால் 1 நாள் ஆயுள் குறையுமாம்எனது ஆயுளில் ஒரு நாளை கூட மிச்சம் பிடிக்காமல்..


வீடு வந்து சேர்ந்தேன்அப்புறம் என்னய்யா என்கிறீர்களாஇருங்க வீடு வந்து ஜெர்கின்குல்லாகிளவுஸ் எல்லாம் கழட்ட தெப்பலாக வியர்த்து இருந்ததுகைகள்மார்புமுகம்எல்லாம் வியர்வை முத்துகள்வெளியே மைனஸ் 10 டிகிரி குளிர்இந்தக் குளிரில்உங்களுக்கு இப்படி வேர்க்குதா என்று அனைவரும் வியந்தனர்


இதில் காமெடி என்னன்னா 50 கி.மீ தூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கு இவங்க போன்செய்ய அவர்களும் குடும்பத்தோடு காரில் வந்து கண்காட்சி போல என் வியர்வையைகண்டு வியந்து சென்றனர்ஆம் நண்பர்களே இப்படி சிகரெட் வெறி பிடித்தவன்இப்போது அந்த பழக்கத்தை முற்றுலும் விட்டொழித்துவிட்டேன்! 🩷

No comments:

Post a Comment