#லீமெரிடியன்_பஃபே
“தப்பித் தவறி 5 ஸ்டார் ஓட்டலுக்கு யாரும் சாப்பிடப் போகாதிங்க உங்க காசைக்கறந்துடுவாங்க” என்பது, வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்றநம்பிக்கையை போன்றது! வெஜ் - நான் வெஜ் எதுவா இருந்தாலும் நான் நல்லாசாப்பிடுவேங்க! எனக்கு ஏகப்பட்ட உணவு வெரைட்டிகள் ஒரே நேரத்தில் வேணும்! நான்எப்படிங்க 5 ஸ்டார் ஓட்டல் போறது? நம்மூர்ல நல்ல அசைவக் கடையில் மூன்றுவெரைட்டியோடு..
சோறோ பிரியாணியோ சாப்பிட்டாலே கிட்டத்தட்ட 1000 ரூபாய் ஆகிடுது! நான் எப்படி5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவது? உங்கக் கேள்வி நியாமானது தான்! ஆனா உங்களுக்குஏற்ற பெஸ்ட் ஓட்டல் 5 ஸ்டார் ஓட்டல்கள் தான்! ஆச்சரியமா இருக்குல்ல! அப்போவாங்க என் கூட கோவை லீ மெரியன் ஓட்டல் பஃபே லஞ்சுக்கு! ஆத்தி!! அந்த ஓட்டலா!! ஒரு சாப்பாடு 4 ஆயிரம் 5 ஆயிரம் வருமே என்கிறீர்களா? இல்ல நீங்க..
ஒரு நல்ல அசைவ ஓட்டலில் சாப்பிடும் அதே ஆயிரம் ரூபாயுடன் அதிக பட்சம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் கூட தந்தால் போதும்! (சலுகை இல்லாத போது) சில மாதக்கடைசி வாரங்களின் வார நாட்களில் 2 நபர்களுக்கு சேர்த்தே ₹1500 (+tax) விலைஃபிக்ஸ் செய்து இருப்பார்கள்! அதை நீங்கள் இணையம் வாயிலாக செக் செய்துகொள்ளலாம்! அப்படி இருந்தா தயவு செய்து உடனே இங்கு போய்..
சாப்பிட்டு விடுங்கள்! சரி அப்படி இங்க என்னென்ன எல்லாம் ஸ்பெஷல்?! 60 வகைக்கும்மேற்பட்ட உணவு வகைகள்! ஹாட் சூப் துவங்கி, ஸ்டார்ட்டர் வகைகள், சைவ / அசைவ, தென் இந்திய / வட இந்திய / சீன / இத்தாலி / ஸ்பானிஷ் வகை உணவுகள், ஜூஸ், ஸ்வீட்ஸ், கேஸ், டெஸர்ட்ஸ், வித விதமான ஐஸ் க்ரீம்கள் என நூற்றுக் கணக்கானஉணவுகளை அன்லிமிட்டாக வாங்கலாம்! வாழைத் தண்டு, டொமேட்டோ..
பச்சை காய்கறிச் சாறுன்னு சைவத்தில் 3 வகை சூப், மட்டன் போன், சிக்கன், எக் க்ளியர், என அசைவத்தில் 3வகை சூப் (இது நான் சென்ற அன்று) நீங்கள் அன்றைய சூப் வகைகள்எதுவென்று கேட்டு தேர்ந்தெடுங்கள்! இங்கு நண்பகல் 12 மணிக்கு பஃபே துவங்கும்! நீங்கள் காலை உணவை லைட்டாக சாப்பிட்டுவிட்டு 12:15க்கு இங்கு வருவது சிறந்தநேரமாகும்! சூடான சூப்பை உங்கள் நட்புடன் சிரித்துப் பேசிக் கொண்டே..
ரசித்து குடிக்கவும்! இந்த பஃபே ஹாலே அரண்மனை போல அழகாக இருக்கும்! அந்தப்பின்னணியில் இங்கு செல்ஃபிகள் இன்ஸ்டா ரீல்கள் எடுத்துக் கொள்ளலாம்! ஒரு12:45க்கு ப்ளேட் எடுத்துக் கொண்டு பஃபே கவுண்டருக்கு போனால், ஸ்டார்ட்டர்களாகடிராகன் சிக்கன், சில்லி ஷிரிம்ப், மட்டன் மர்க், போன்லெஸ் நண்டு, ஃபிஷ் டிக்கா சிக்கன்65 என ஏராளமானவை இருக்கும்! மங்கோலியன், சீனா, ஸ்பானிஷ் வகை..
சிக்கன் & மட்டன் வகைகளும் இங்கு உண்டு! ஆகவே உங்களுக்குப் பிடித்ததைவேட்டையாடலாம்! வெஜ் பல்ஸ், பனீர் டிக்கா, பிந்தி ஃப்ரை, ஆனியன் பக்கோடா, வெஜ்கெபாப், கோஃப்தா என சைவத்திலும் பட்டையை கிளப்பும் ஸ்டார்டர்கள்! இதையும்நீங்க மெதுவா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுட்டு ஒரு 15 நிமிடம் கழித்து மெயின் கோர்ஸ் வந்து முதலில் அவாதி தம் மட்டன் பிரியாணியை ஆவி பறக்க நாலு பெரிய..
பீஸுடன் எடுத்து தட்டில் போட்டு, தயிர் வெங்காயம், தால்ஸா அல்லது மட்டன் குழம்புடன்சேர்த்து டக்குன்னு சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டு விடுங்கள்! நீங்கள் கொடுத்த காசுஇதுக்கே சரியாகிவிடும்! பிரியாணி அனுபவத்தை நிறைவு செய்து பிறகு சிறிது நேரம்கழித்து பிற உணவுகளை எடுங்கள்! 12:15 மணிக்கு உள்ளே வந்த நீங்கள் 2 :15 மணிவரை இங்கு பொறுமையாக சாப்பிடும்படி வரவும்! அடித்துப் பிடித்து அரக்கப் பரக்க..
இங்கு சாப்பிட வராதீர்கள்! பிறகு அருமையான அரிசிச் சோறு, வெஜ் பிரியாணி, கத்திரிக்காய் வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், அவரைக்காய் ஃப்ரை, பட்டாணி பால் கூட்டு, உள்ளித் தீயல், அவியல், உருளை ஃப்ரை, ரசவாங்கி என சைவவகைகளிலும், மட்டன் குழம்பு, சுக்கா வருவல், ஆந்திரா மீன் குழம்பு, செட்டி நாடு நாட்டுக்கோழிக் குழம்பு என அசைவ வகைகளிலும்.. தால், தால் மக்னி, கடாய் பனீர், பிந்திமசாலா போன்ற..
வட இந்திய வகைகளையும் இஷ்டம் போல வெட்டலாம்! முட்டைக்கு என்றே ஒரு தனிகவுன் டர் இருக்கு! ஆம்லெட் வகைகள், ஆப்பாயில், பொடி மாஸ், கலக்கின்னு கேட்டுவாங்கிக்கலாம்! தோசை வகைகளும் கிடைக்கும்! பீட்ஸா கிடைக்கும்! ஸ்பானிஷ் / சைனீஸ் / பிரெஞ்ச் ஆம்லெட் எல்லாம் உண்டு! சப்பாத்தி, நான், தந்தூரி ரொட்டிவகைகளும் உண்டு! பிறகு டெஸர்ட்ஸ் பக்கம் போனா 10 வகைகள்.. ஐஸ்க்ரீம் 10 வகைகள்..
என இங்கு உண்டு! குழந்தைகளுக்கு கட்டணம் குறைவு! அன்றைய தேதியில் என்னவிலை என்பதை தெரிந்து கொண்டு போகவும்! ஃபேமிலி காம்போ ஆஃபர்களும் உண்டு! நீங்கள் நன்கு சாப்பிடும் நபர்களோடு இங்கு செல்வது சிறந்தது! நீங்கள் வெளியில்சாப்பிடும் உயர்தர ஓட்டல்களை விட இங்கு உணவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும்! ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதால் தரக்கட்டுப்பாடு கொள்கைபடி மிகுந்த தரமான..
உணவுப்பொருட்களில் , தலை சிறந்த செஃப்கள் சமைப்பதால் எல்லா உணவுகளும்நன்றாக இருக்கும்! மேலும் அழகிய அரண்மனை போன்ற அலங்கார சூழல், Ac ஹால் எனஇங்கு மிகச்சிறந்த ஒரு உணவு அனுபவம் உங்களுக்கு கிட்டும்! வார இறுதிகளில் கூட்டம்அதிகம் இருக்கும்! காம்போ உட்பட எந்த விலைச் சலுகைகளும் உங்களுக்குகிடைக்காது! மதியம் மட்டுமின்றி இரவு டின்னர் பஃபேவும் உண்டு அதற்கான..
கட்டணம் தனி! மது வகைகளுடன் பஃபே சாப்பிட இன்னொரு ஹால் உள்ளது! உங்கள்வருகையை முன்பதிவு செய்துவிட்டு செல்வது சிறந்தது! டின்னரை விட லஞ்சுக்கு இங்கேபோகவும்! சமைக்கும் வேலை இல்லை என்பதால் வீட்டில் உங்கள் மனைவியும் குஷிஆகிவிடுவார்! அநேகமா அன்றிரவு 2 இட்லி மட்டும் சாப்பிட்டு தூங்கிடுவீர்கள்! ஏன்னாமதியம் நீங்க சாப்பிட்டதே போதும் என்பது போல இருக்கும்!
உங்கள் குழந்தைகளுக்கும் இந்த இடம் பிடிக்கும்! குடும்பத்துடன் ஒரு நல்ல நான் வெஜ்ரெஸ்டாரெண்ட் போறதுக்கு பதில் இங்கு ஒரு முறை போய் ரசிச்சு ருசிச்சிட்டு வந்துசொல்லுங்க!
No comments:
Post a Comment