“அரபிக் குத்து”
என் ராசியில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று இருந்த காலம் அது! 6வது துபாய்சுற்றுப்பயணத்தில் ஷார்ஜாவில் நண்பனது வீட்டில் இருந்தோம்! ஷார்ஜாவில் மது, டிஸ்கோ, நைட் கிளப் போன்றவை எல்லாம் அனுமதி இல்லை! அங்கிருந்து 20 கி.மீதூரத்தில் துபாயில் எல்லாம் இருந்தது! அங்கு எம் கால் படாத கிளப் இனி புதிதாககட்டினால் தான் உண்டு!
இங்கே அஜ்மன்னு ஒரு ஊரு இருக்கு அங்க துபாய் மாதிரியே நிறைய கிளப் இருக்குன்னுதெரிஞ்சு கிளம்பினோம். என் நண்பரின் அரபுப் பார்ட்னர் மினி லாரி சைஸில் இருந்தஅவரது ரேஞ்ச் ரோவர் காரை அவரது ஓட்டுநர் சகிதம் எங்களுக்கு அனுப்பியிருந்தார்! அந்தக் காருக்குள் கபடியே ஆடலாம் அவ்வளவு பெருசு! அத்தனை சொகுசு!
அஜ்மன் நெருங்க நெருங்க எங்கும் உற்சாகக் குரல்கள் அரபு கோஷங்கள் மக்கள்வீதியில் நடனமாடிக் கொண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டும் பியர் முதற் கொண்டு பலமது வகைகளை குடித்துக் கொண்டும் இருந்தனர்! அந்தப் பிரதேச மன்னரின் கால்பந்துஅணி அன்று அங்கு நடந்த லோக்கல் ஃபுட்பால் லீக்கில் சாம்பியன் கோப்பைவென்றிருந்தது!
எங்கள் மீது சுக்கிரனின் வக்கிரப் பார்வை உக்கிரமாக விழுந்திருந்தது! ஆம் அன்றுஎல்லா கிளப்புகளிலும் இரவு 12 மணி வரை எல்லாருக்கும் மது முற்றிலும் இலவசம் என்றுஅப் பிரேதச இளவரசர் அறிவித்துவிட்டார் என்று அறிந்தோம்! இந்த வாக்குறுதிக்குதமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்து இருக்கலாம் அல்லவா! இளவரசரின் அறிவிப்புநாடெங்கும் பரவ வீட்டில் நிம்மதியாக..
தூங்கிட்டு இருந்த அரபிகள் எல்லாம் க்ளப்புகள் நோக்கி படையெடுத்து வரஆரம்பித்தனர்! அஜ்மன் கேளிக்கை விடுதிகள் எல்லாம் கடற்கரையில் வரிசையாகஇருக்கும்! இந்தியன், பாகிஸ்தான், ஈரான், ரஷ்யன் என க்ளப்புகள் இருக்கும்! நாங்கள்எல்லா கிளப்புக்கும் தலா 30 நிமிடம் என முறை வைத்து போய்க் கொண்டிருந்தோம்!
ஒரு கட்டத்தில் ஒவ்வொரு கிளப்பிலும் மக்கள் கூட்டம் அதிகமாகி நெரிசலும் கூச்சலும்அதிகரிக்க கிளப் மேனேஜர்கள் அரபிகளுக்கே முன்னுரிமை என்று வெளியூர் ஆட்களைவெயிட்டிங்கில் வைத்துவிட்டனர். ரேஞ்ச் ரோவரில் வந்திருக்கும் நம்ம ரேஞ்சே தெரியாமநிப்பாட்டிட்டானே எனும் அறச்சீற்றம் பொங்க ச்சீச்சீ இந்த கிளப் புளிக்கும்..
அந்த இளவரசர் கொடுத்த இலவசங்கள் வேண்டாம் என்ற ஞானம் பிறக்க எலைட் கிளப்நோக்கி எங்கள் வாகனம் பறக்க ஆரம்பித்தது! அஜ்மனிலேயே புகழ் பெற்ற ராயல் க்ளப்ஒன்றில் எங்கள் கார் நின்றது! பணியாள் ஒருவர் கார் கதவை திறக்க ஓடி வந்தார், ரேஞ்ச்ரோவர் காரிலிருந்து ஷேக்குகள் இறங்குவார்கள்னு நினைச்சா நாலு பேக்குகள்இறங்குறாங்களே என்று அவர் நினைத்தது எங்களுக்கு கேட்டது!
ஒரு வழியாக உள்ளே நுழைந்து வாகாக ஒரு டேபிளை தேர்வு செய்து அமர்ந்தோம் இங்குமுதல் லார்ஜ் இலவசம் என்று இளவரசர் அறிவிப்பாம்! மகாப்பிரபு நீங்க இங்கேயுமாவந்துட்டிங்க என்று நினைத்துக் கொண்டு ஜமாவை துவக்க அதிரடி அரபி இசைக்கு 4 பெண்கள் பெல்லி நடனம் ஆடத் துவங்கினர்! அந்த தாள லயத்திற்கு ஏற்றபடி ஒருகிரைண்டரை போல அவர்கள் இடுப்பை சுழற்றி சுழற்றி ஆ(ட்)டிக் காட்டினார்கள்!
நிறைய ஷேக்குகள் தங்கள் கேர்ள்ஃபிரண்டுகளோடு வந்திருந்தனர்! 12 மணிக்கு மேல்டான்ஸ் ப்ளோர் ஓபன் ஆக வந்திருந்த ஜோடிகள் அங்கு போய் ஆட ஆரம்பித்தனர்! மாப்ள நாமும் போய் ஆடுவோமா என்றார் நண்பர் ஒருவர்! அல்ரெடி நாம ஆடிட்டுதானேடா இருக்கோமுன்னு நினைச்சேன். இப்போ டான்ஸ் ஃப்ளோரில் ஷேக் ஒருவர் தன்கேர்ள் ஃபிரண்டோடு ஆடவந்தார்!
நமீதாவைவிட நான்கு இஞ்ச் அதிக உயரம் அழகுன்னா அப்படி ஒரு ஆஜானுபாகுவானஅழகு! இவள் இந்த கிளப்பின் ஹாட் கேர்ள் ஜெர்மனி நாட்டுப் பெண் என்றார் அங்கிருந்தவெயிட்டர் ஒருவர்! அவள் ஷேக்கோடு ஆடிக்கொண்டே ஷேக் தடுமாறி ஷேக் ஆகும்நேரத்தில் அவள் அருகில் ஆடும் மற்ற ஆண்களின் கைகளைப் பிடித்து, கன்னத்தைத்தடவி 20, 50 என திர்ஹாம்களை அறுவடை செய்து கொண்டிருந்தாள்!
அவளது கள்ள ஆட்டத்தை கண்ட எனது நண்பர் கையில் நான்கு 50 திர்ஹாம்நோட்டுகளை எடுத்து கொண்டு தனக்கும் ஒரு தடவல் கிடைக்கும் என்று நம்ப்பி அங்குபோனார். முதலிரண்டு நோட்டுகளுக்கு அவர் ஆசை நிறைவேறியது மனுசன் அதோடுதிரும்பி இருக்கலாம்! மூன்றாவது நோட்டை தரும் நேரத்தில் அந்த ஷேக்பார்த்துவிட்டார்! என் நண்பர் முகத்தில் விட்டார் பாருங்க ஒரு குத்து! நண்பர்சுருண்டுவிழ.. குத்திய வேகத்தில் ஷேக்கும் கீழே விழ.:
ஒரு குழப்பமான சூழலில் நண்பரை மீட்டுக் கொண்டு க்ளப்பை விட்டு வெளியேறி காரில்ஏறி கிளம்பி ப்ரேக்கை ஷார்ஜாவில் வந்தே மிதித்தார் டிரைவர். மறுநாள் நண்பர் முகத்தில்வலது கண்ணை சுற்றி கருஞ்சிவப்பில் தென் அமெரிக்கா மேப் தெரிந்தது! அது முற்றிலும்ஆற 2 மாதங்கள் ஆனதாம்! எனக்கு அரபிக் குத்து என்றால் சட்டுன்னு இது தான்நினைவுக்கு வரும்.!
டிஸ்கி : அந்த ஜெர்மன் அழகி பேரு க்ளாரா! இன்னொரு முறை அங்க போயிருந்த போதுஅறிந்த உண்மை!
No comments:
Post a Comment