Monday, 20 January 2025

நல்லி மசாலா

#நல்லியெலும்பு_மசாலா 




இனிமேல் நமக்கு தீவிர சைவ உணவுகள் தான் என்று முடிவெடுக்கும் போதெல்லாம்விஸ்வாமித்திரர் முன் வந்து ஆடும் மேனகை போல் மே.. மேன்னு கத்திகிட்டு இந்தஅண்ணா.. அடச்சே ஆடு வந்துடுதுகொரோனா லாக்டவுனிலேயே வாரா வாரம் ஆரவாரம்போல அசைவ உணவுகளை ருசித்த நமக்கு சைவ உணவுகள் செட்டாகுமா?


இந்த சுயபரிசோதனையை என்றாவது எடுத்து இருக்கிறோமா என சேலம் சாரதா காலேஜ்ரோட்டின் அருகேயுள்ள பிருந்தாவன் தெருவில் நின்று யோசிக்கும் போதே காற்றில்மிதந்து வந்த மட்டன் எலும்பு மசாலாவின் நறுமணம் மனதை மயக்கியது மட்டுமின்றி என்கால்களை மணம் வந்த திசை நோக்கி இழுத்துச் சென்றது


மெல்லத் திறந்தது கதவு படத்தில் மோகன் அமலாவை தேடிச் சென்றது போல நானும்தேடி ஓடினேன்அங்கு நல்லா திறந்த கதவுகளோடு ஜுனியர் குப்பண்ணா மெஸ்தென்பட்டதுநான் சிறிது ஜெர்க் ஆனேன்ஏனெனில் ஜுனியர் குப்பண்ணா கடைகளின்பல ஊர்க் கிளைகளில் நான் சாப்பிட்டுப் பெற்ற அனுபவங்கள் அப்படி


ஜுனியர் குப்பண்ணா எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கும் என்று அஞ்சுவது போன்ற ஒருகடைநம்பிப் போனால் நட்டாற்றில் விடும் நம்பாமல் போனால் நல்லி மசாலா தந்துஅசத்தும்ஜுனியர் குப்பண்ணாவில் நான் ரசித்த & வெறுத்த கிளைகளில் எல்லாம்  நல்லிஎலும்பு மசாலா மட்டும் குறை வைத்ததில்லை என்பேன்


இந்த டேட்டாவை என் முளை எனக்கு சான்றளிக்க.. சரி வருவது வரட்டும் என டேபிளில்அமர்ந்து ஒரு சாப்பாடு ஒரு நல்லியெலும்பு மசாலா என்று ஆர்டரினேன்! 2 நல்லிஎலும்புகளை ஏவுகணைகள் போல தட்டில் ஆவி பறக்க கொண்டு வந்து வைத்தனர்இரட்டைக் கிளவிகள் போல தட்டில் அவை அடுத்தடுத்து வீற்றிருந்தன


பொல பொலவென வெந்த வெள்ளை சோற்றோடு கரகரவென அரைத்த மசாலாவில்விறுவிறுவென்ற செல்லக் காரத்துடன் தட்டில் கிடந்த நல்லி மசாலாவை சோற்றில்எடுத்துப் போட்டு மேலாக பிரட்டுவது போல கலந்தேன்’. நிச்சயம் அது தேன் தான்அற்புதமான மசாலா கலவையில் கறியை பக்குவமாக சமைத்திருந்தனர்


கறி அப்படியே இலவம் பஞ்சு போல மென்மையாக வெந்திருந்ததுதாமரை இலைதண்ணீர் போல் எலும்பில் கறி ஒட்டாமலிருந்ததுஎலும்பை உறிஞ்சினால் உள்ளிருக்கும்ஜெல்லி “கண்ணடிச்சாலே வந்துடுவேன்” போல வாய்க்குள் நுழைந்ததுமட்டனில் நல்லிஎலும்பு மசாலா ஏன் மிகுந்த ருசி என்பது உங்களுக்குத் தெரியுமா


அந்தக் கால் எலும்போடு கலந்து சமைப்பதால் தான்கறியை எப்போதும் எலும்புடன்சமைப்பதே நல்ல ருசியைத் தரும்ஆட்டுக் கால் சூப் முதல் பாயா வரை மட்டன் எலும்புவகை க்ரேவிக்கள் சுவை பட கிடைக்க இதுவே காரணம்நான் ரசித்து சாப்பிடும் அழகைகண்டு நல்லி கிரேவியைக் ஒரு தட்டில் கொண்டு வந்து தந்தனர்


இன்னொரு ப்ளேட் நல்லியும் நான் சொல்வதற்கு அது காரணமாக இருந்ததுஇரண்டாவது வந்த நல்லியின் தலையில் இறைச்சி புட்ட பர்த்தி சாய்பாபா தலை முடிபோல புஷ்டியாக இருந்ததுஇப்போது சோற்றில் ரசத்துக்கு வந்திருந்தேன்அந்தத்தக்காளி ரசத்தோடு நல்லிக்கு 10 பொருத்தமும் பக்காவாக பொருந்தியது


பாகுபலியின் க்ளைமாக்ஸ் போல இறுதியில் வந்த தயிர்ச் சோறு காலகேயரின் படைபோல என் இலையெங்கும் பரந்திருக்க மகேந்திர பாகுபலி வீசியெறிந்த குண்டு போலநடுவில் விழுந்த நல்லியெலும்பு அடுத்த சில நிமிடங்களில் தயிர் சோற்றை காலிசெய்ததுதயிருக்கும் நல்லி மசாலாவுக்கும் அப்படி ஒரு ருசி!


வாய்க்கும் வயிறுக்கும் நடந்த யுத்தத்தில் சேதாரம் சாப்பிட்ட இறைச்சிக்கு தானே தவிரஇரைப்பைக்கு இல்லை என்பதை ஏவ்வ் என்று ஏப்ப நோட்டிஃபிகேஷனில் சொன்னதுவயிறுசேலம் பிருந்தாவன் தெரு டாக்டர் சூடாமணி ஆஸ்பிடல் தாண்டி இருக்கும்ஜுனியர் குப்பண்ணாவில் நான் அனுபவித்தது இது


❌ டிஸ்கி ❌ உங்க கால் விரலை இழுத்துப் புடிச்சுசொல்றேன் வேறு கிளைகளில்நீங்கள் பெற்ற மோசமான அனுபவங்களை இங்கே கமெண்ட்டில் வந்துகொட்டவேண்டாம்ஜுனியர் குப்பண்ணாவுக்கும் எனக்குமே தீர்க்கப்படாத பலபிரச்சனைகள் இன்னும் உறங்கும் எரிமலையாக எனக்குள் அமிழ்ந்துள்ளது! 🛑

No comments:

Post a Comment