Friday, 17 January 2025

ஸ்பெயினின் தோனி

#ஸ்பெயினின்_தோனி  ⚽️ ⚽️

டேனி ஒல்மோ ⚽️ ⚽️ 




2024 ஐரோப்பிய சாம்பியன் ஆகியிருக்கிறது ஸ்பெயின்! இன்றைய இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் போலத் தான் ஸ்பெயினும், இங்கிலாந்தும்! இந்த ஃபைனலுக்கு முன்பு இங்கிலாந்து நிச்சயம் இந்தக் கோப்பையை வெல்வார்கள் என பல கால்பந்து ஜாம்பவான்கள் கணித்து இருந்தனர்! இன்று நடந்த அனல் பறக்கும் ஃபைனல் விறுவிறுப்பாக அமைந்தது! அனைவரது கால்களிலும் தீப்பொறி பறந்தது! 


ஆட்டம் துவங்கிய முதல் 45 நிமிடங்கள் எந்தப் பக்கமும் கோல் விழவில்லை! ஆட்டம் முழுவதும் 66% பந்தை தங்கள் வசமே வைத்திருந்தது ஸ்பெயின்! ஆட்டத்தின் 47வது நிமிடம் இங்கிலாந்து கோல் பகுதியின் இடதுபுறத்தில் சில மைக்ரோ விநாடி தடுப்பு வீரர்கள் இல்லாத வெற்றிடம் அமைந்தது! இதை ஸ்பெயின் வீரர் வில்லியம்ஸ் சரியாக பயன்படுத்தி அபாரமாக கோலடித்தார்! அடுத்த நிமிடமே இன்னொரு கோல் வாய்ப்பு!!


இதே திசையில் ஸ்பெயினின் ஒல்மோ அடித்த கோல் சீறிப்பாய்ந்து கோல் கம்பத்தை விட்டு சில அடிகள் தள்ளிப் பறந்தது! அதன் பிறகு மீண்டும் 25 நிமிடங்கள் கோல் இல்லை! ஆட்டத்தின் 70 வது நிமிடத்தில் இங்கிலாந்தின் பால்மர் மாற்று வீரராக களம் இறங்கினார்! அடுத்த 3 வது நிமிடத்தில் கோல் கம்பத்திற்கு வெகு துரத்தில் இருந்து அவர் அடித்த அதிவேக கோல் பிரேசிலின் ராபர்டோ கார்லஸ் பாணியில் இருந்தது! 


அதன் பிறகு 86வது நிமிடத்தில் ஸ்பெயினின் குக்கூரேலாவிடம் இருந்து passஐ பெற்ற அதே விநாடியில் சூப்பர் பாஸ்ட் கோலை அடித்தார் மாற்றுவீரர் OYARZABAL  86வது நிமிடத்தில் விழுந்த இந்த கோலால் ஸ்பெயினின் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது! அந்த கோலிலேயே ஸ்பெயின் வென்றுவிட்டதாக அனைவரும் கருதினர்! ஆனால் இந்த ஆட்டத்தின் மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வு நடைபெற்றது 89வது நிமிடத்தில்! 


86வது நிமிடம் கோல் விழுந்ததால் அடுத்த 4நிமிடங்கள் இங்கிலாந்து ஆடிய ஆட்டம் வேறுவிதமாக இருந்தது! ஸ்பெயினின் கோல் பகுதியை முற்றுகை இட்டுக் கொண்டே இருந்தனர்! 88வது நிமிடத்தில் ஸ்பெயின் பகுதியில் கோலை தடுக்கும் முயற்சியில் பந்தை கார்னருக்கு உதைக்க கார்னர் கிக் வாய்ப்பு பெற்றது இங்கிலாந்து! இந்த கார்னரிலிருந்து பறந்து வரும் பந்தை எதிர்கொள்ள 7 இங்கிலாந்து வீரர்கள் அங்கே..


தயாராக இருந்தனர்! இப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது! பால்மர் கார்னரில் இருந்து உதைத்து பறந்து வந்த பந்து இங்கிலாந்து வீரர்கள் கூட்டத்தின் தலைக்கு வர ஒருவர் தலையால் கோலுக்கு தள்ள அதை ஸ்பெயின் கோல் கீப்பர் கைகளால் தள்ள அது இன்னொரு இங்கிலாந்து வீரர் தலைக்கு போய் அவர் அதை கோலுக்குள் தள்ள இப்போது கோல்கீப்பர் பக்கத்தில் நின்ற ஒல்மோ அதை தலையால் தள்ள மீண்டும்..


அந்தப்பந்து இங்கிலாந்து அணி பக்கம் போய் மீண்டும் கோலுக்குள் இங்கிலாந்து வீரர் தலையில் முட்ட இந்த முறை கோல் கம்பத்திற்கு மேல் பந்து பறந்தது! இந்த சில விநாடிகள் நடந்த இந்த ஆட்டம் டென்னிஸில் ஜோகோவிச் - நடால் இருவரும் மாறி மாறி அடிப்பதை  போல கண்கொள்ளா காட்சியாக இருந்தது! மிட்ஃபீல்டு வீரரான ஒல்மோ மிகவும் சமயோஜிதமாக கோல் கீப்பர் அருகே வந்து நின்றதே இந்த மேட்சின்..


திருப்புமுனை! அந்த கோல் மட்டும் விழுந்திருந்தால் மேட்ச் டை பிரேக்கர் வரை கூட சென்றிருக்கலாம்! ஸ்பெயினின் தோனியாய் டேனி செய்த இந்த சம்பவத்தை மறக்காமல் ஹைலைட்சில் காணத்தவறாதீர்கள்! பர்த்டே பாய் யாமல் இந்த ஆட்டத்தில் அடித்த 2 கோல் முயற்சிகள் அருமை! அவருக்கு இன்று அதிர்ஷடம் இல்லை! அதுவும் அற்புதமான ஆட்டமே! ஐரோப்பிய சாம்பியனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

No comments:

Post a Comment