Thursday, 16 January 2025

சினிமாத் தமிழர்

#சினிமாவை_கண்டுபிடித்தது_தமிழன்

#மறைக்கப்பட்ட_ரகசியங்கள்

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை வெல்லெஸ்லி பிரபு (வெள்ளெலியல்ல) ஆட்சி செய்த போது சென்னப்பட்டிணத்தில் வசித்த தீவிர ஶ்ரீராம பக்தரான கோட்டியப்பன் என்னும் தமிழக விஞ்ஞானி ஒருவர் தீவிர சினிமா ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்! படம் பிடிக்கும் கருவியை கிட்டத்தட்ட அவர் கண்டுபிடிக்கும் தருவாயில் தமிழ்நாட்டில் மிகப்பெரும் பஞ்சம் வந்தது!

அப்போது சென்னை கலெக்டராக இருந்தவர் பெஞ்சமின் லூமியர்! ஆம்.! இவர் வேறு யாருமல்ல பின்னாளில் லண்டனில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய லூமியர் சகோதரர்களின் முப்பாட்டனார் ஆவார்! அந்தத் தாது வருடப் பஞ்சத்தில் பலர் தமது வீடுகளை கலெக்டர் பெஞ்சமினிடம் வந்த விலைக்கு விற்றுவிட்டு கிடைத்த பணத்துடன் வெளியேற அந்த வீட்டுப் பத்திரங்களுக்கு நடுவே..

விஞ்ஞானி கோட்டியப்பனின் காமிரா ஆராய்ச்சிக் குறிப்பையும் தவறுதலாக வைத்து அவரது மகன் சாலியப்பன் அவர்கள் தந்து விட்டாராம்! அதனால் அதை காணாமல் தேடி விரக்தியில் கோட்டியப்பன் பித்து பிடித்தே அலைந்து இறந்தாராம்! இந்தக் குறிப்பை பெஞ்சமின் லண்டனுக்கு எடுத்துச் சென்று தன் வீட்டில் வைத்துவிட்டாராம்! பிற்காலத்தில் இக்குறிப்புகளை வைத்தே..

லூமியர் சகோதரர்கள் மிக மிகச் சுலபமாக சினிமா காமிராவைக் கண்டுபிடித்தனர்! இந்த பேரதிர்ச்சி தரும் உண்மை Behind the Cinema screen என்னும் நூலில் சினிமா வரலாற்று ஆசிரியர் செயின்ட் ஜான் ஃபால்ஸ்வெல் எழுதியுள்ளார்! மேலும் விஞ்ஞானி கோட்டியப்பன் & சாலியப்பன் இருவருமே புலால் உண்ணாத ஹிந்துக்கள் ஆவார்கள்! அவர்கள் நினைவாகவே..

சென்னையில் கோடம்பாக்கம், சாலிகிராமம் என பெயர் சூட்ட மராட்டிய சிங்கம் பாலகங்காதர் திலகர் அவர்கள் பரிந்துரைத்து அதை அன்றைய பிரிட்டிஷ் அரசு ஏற்று அப்பெயர்களைச் சூட்டியது! அதுவரை தானுமே புலால் உண்ணவில்லை என்னும் புல்லரிக்கும் உண்மையையும் ஃபுல் ஸ்டாப் வைக்காமல் ஃபுல் பேஜில் அந்நூலில் எழுதி அதை உலகிற்கு தெரியப்படுத்தி உள்ளார்.

சினிமாவை கண்டுபிடித்ததே தமிழன் அதுவும் அவன் ஒரு ஹிந்து தான் என்பதை எண்ணும் போது நம் பாரதச் சொந்தங்களின் நெஞ்சம் பெருமிதத்தில் விம்முகிறது! அவர்கள் உள்மனதோ அமெரிக்கனை கும்முகிறது, ஆஸ்கார் விருதிற்கு “கோட்டிஸ்கார்” விருது எனப் பெயர் சூட்டுவோம் ! விஞ்ஞானி கோட்டியப்பஜிக்கு ஹாலிவுட்டில் மணிமண்டபம் எழுப்பப் போராடுவோம்!

வரும் கிறிஸ்துமஸ் அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சனாதன ஹிந்து சாலியப்பன்ஜி பெயர் சூட்ட நாம் அனைவரும் அமெரிக்காவில் நாம் அணி திரள்வோம்.!

போர்.. ஆமா… போர்.. வெற்றிவேல்.. வீரவேல்..

No comments:

Post a Comment