Tuesday, 21 January 2025

தனியார் டிரான்ஸ்போர்ட்

தமிழகத்தில் தனியார் டிரான்ஸ்போர்ட் ஆரம்பித்தால் எப்படி விளம்பரம் பண்ணுவாங்க- 1


லலிதா டிரான்ஸ்போர்ட்ஸ் (லலிதா ஜுவல்லரி குரூப்)


நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கிற பணத்தை சரியான பஸ் கட்டணத்துக்கு தான் செலவழிக்கிறிங்களா..? 


4 டிரான்ஸ்போர்ட்டில் பஸ் ஏறுவதற்கு முன் முதல்ல லலிதா டிரான்ஸ்போர்ட்டுக்கு வாங்க.. 


எங்க டிக்கெட் எஸ்டிமேட் ஸ்லிப் கேட்டு வாங்கிக்கோங்க..


அதை கம்பேர் பண்ணிப் பார்த்துட்டு அதுக்கப்புறம் நீங்க எந்த டிரான்ஸ்போர்ட்டில் வேணா டிராவல் பண்ணுங்க.. “மறந்துடாதிங்க”





ஆச்சி டிரான்ஸ்போர்ட்ஸ் (ஆச்சி மசாலா க்ரூப்) 2


ரப்பருக்கு பேர் போன கேரளா ரப்பரில் இருந்து தயாரித்த டயரு.. 


ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்சுக்கு பேர் போன லூதியானா & கோவையில் இருந்து ஸ்பேர் பார்ட்சு..


பஸ் பாடி பில்டிங்கில் பேர் போன கரூர்.. இப்படி நாடெங்கும் பார்த்து பார்த்து வாங்கின ஸ்பேர் பார்ட்சை இணைத்து  ஓடுற பஸ் நம்ம ஆச்சி டிரான்ஸ்போர்ட்டு!


ஒவ்வொரு டிக்கெட் உடனும் ஒரு ஆச்சி குலாப் ஜாமூன் மிக்ஸ் இலவசம்.. 


இனி ஒரு விதி செய்வோம் ஆச்சி டிரான்ஸ்போர்ட்டில் பயணம் செய்வோம்.!





லெஜண்ட் சரவணா டிரான்ஸ்போர்ட்ஸ் (சரவணா ஸ்டோர்ஸ் குரூப்)3


(அண்ணாச்சி ஹன்சிகாவுடன் ஆடிய படி) பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் சரவணா தான் பெஸ்ட்.. 


டிக்கெட் கட்டணம் பெஸ்ட்.. குஷன் சீட்டு பெஸ்ட்.. ஏசி கூட பெஸ்ட்.. டிரைவிங் கூட பெஸ்ட்.. 


எங்கள் கண்டக்டரின் அன்பான உபசரிப்பில் நீங்கள் மயங்கிப் போவீர்கள்.. 


அன்பால் இணைவோம் அண்ணாச்சியை புகழ்வோம்..


கட்டணம் கடுகளவு.. வசதிகள் கடலளவு.. 


புரசைவாக்கம், போரூர், பாடி, ஓ.எம்.ஆர், வேளச்சேரி, குரோம்பேட்டை வழித்தடங்களில் லெஜண்ட் சரவணா டிரான்ஸ்போர்ட் 


எப்பவுமே பெஸ்ட்.. அன்பால் இணைவோம்..!





வசந்த் அன் டிராவல்ஸ் (வசந்த் அன் கோ குரூப்)4


வசந்த் அன் டிராவல்ஸ்..


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்க ஆம்னி பஸ் வசதி கொண்டே முதல் நிறுவனம் வசந்த் அன் டிராவல்ஸ்..


வசந்த் அன் கோ வில் இருந்து வாங்கிப் பொருத்தப்பட்ட ஃப்ரிட்ஜ், ஏசி, டிவி, வசதிகளுடன் அமைந்த சொகுசுப் பேருந்துகள் வசந்த் அன் டிராவல்ஸ்..


ஒரு ரூபாய் மட்டும் முன்பணம் செலுத்தி உங்கள் பயணச்சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள்..!


மீதித் தொகையை மாதா மாதம் சுலபத் தவணைகளில் கட்ட பைனான்ஸ் வசதி செய்து தரப்படும்..


சென்னை to மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, போன்ற ஊர்களுக்கு ஆம்னி பஸ் டிக்கெட் வாங்கினால் ₹100 மதிப்பிற்கான லோக்கல் டவுன் பஸ் டிக்கெட் ஃப்ரீ..


குடும்பத்தோடு குரூப் டிக்கெட் எடுப்பவர்களுக்கு தங்க நாணயம் இலவசம்..


வசந்த் அன் டிராவல்ஸ் மக்களின் நம்பிக்கையான பயணத்திற்கு எப்போதும் உத்திரவாதம்.. 


வசந்த் அன் டிராவல்ஸ்.! தமிழகமெங்கும்..




கல்யாண் டிராவல்ஸ் (கல்யாண் ஜுவல்லரி க்ரூப்) 5


(பிரபு ஆக்ரோஷமாக பேசுகிறார்) தமிழ் நாட்டில் ஓடுற கவர்மெண்ட் பஸ்ஸில் எதாவது சொல்லிக்கிற மாதிரி ஒரு நல்ல வசதி இருக்கா.?


எந்த வசதியுமே இல்ல ஆனா கட்டணம் மட்டும் அதிகம்.. மக்களே விழித்தெழுங்கள்.. புரட்சி.. போராட்டம்..


2 ரூபாய் பல்பொடி பாக்கெட்டில் கூட விலை அச்சிடப்பட்டு இருக்கு.. ஆனா பஸ் சீட்டில் டிக்கெட் விலை இருக்கா.?


கல்யாண் டிராவல்சுக்கு வாங்க நீங்க உட்காரும் சீட்டிலேயே டிக்கெட் கட்டணத்துக்கு ரேட் கார்டு ஒட்டப்பட்டு இருக்கு.! 


இந்தியாவிலேயே சீட்டில் ரேட் கார்டு போட்ட முதல் டிராவல்ஸ் தான்.!


அதுமட்டுமல்ல எங்க ஐஸ்வர்யம் பஸ்ஸில் முன் கூட்டியே டிக்கெட் புக் பண்ணா 3% முதல் 8% வரை சேதாரம் அடச்சே டிஸ்கவுண்ட் உண்டு..


இங்க 2000 டிரைவர் கண்டக்டர் இருக்காங்க மத்த டிராவல்ஸில் ரேட் கார்டு இருக்கும் ஆனா அதுல உண்மை இருக்காது..


உங்க மகன் நான் சொல்றேன் கல்யாண் டிராவல்சுக்கு வாங்க.. நம்பிக்கை அது தானே எல்லாம்.. 


கல்யாண் டிராவல்ஸ் இந்தியா முழுவதும்.!




நித்தியானந்தா டிராவல்ஸ் ( சுவாமிஜி க்ரூப்) 6



நித்யானந்தம்.. அப்படின்னு சொல்லிட்டு தான் பஸ் ஏறணும் இறங்கணும்.!


அப்படிச் சொல்லலைன்னா வெளிநாட்டுக் கண்டக்டர் தமிழில் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார்.!


பயணத்தின் போது ஸ்வாமிஜியின் உரைகள் வீடியோவில் ஒளிபரப்பாகும்..


அதைப் பார்த்தபடி மெய் மறந்து தியான நிலையில் விஜயேந்திரர் போல அமர்ந்து டிக்கெட் எடுக்காவிட்டால்.. 


சிஷ்யப் பெண்கள் நீ எல்லாம் ஒரு ஆம்பளையா நீ ஒரு அம்மாவுக்கு தான் பிறந்தியான்னு ஆதாரம் கேட்பாங்க.. பீ கேர்ஃபுல்..


பஸ்சில் இலவச வைஃபை இல்லை ஆனால் வையும் வசதி இருக்கும்.. 


மடத்துக்குப் போகும் பஸ் கட்டணம் மட்டும் பாதி தந்தால் போதும்..


கேமிரா எந்த ரூபத்திலும் பஸ்சுக்குள் கொண்டு வரக்கூடாது.. வந்தால் பஸ்சில் ஏறவே முடியாது..


முன்னாள் சினிமா நடிகைகளுக்கு இலவச பஸ் பாஸ் உண்டு..


பேருந்து உணவகத்தில் நிற்கும் சமயம் சர்ப்ரைஸ் விசிட்டாக ஸ்வாமிஜி வந்து தோசை சுட்டுத் தருவார்..


தற்சமயம் திருவண்ணாமலை தடம் மட்டும் கேன்சல் ஆன டிராவல்ஸ் இது..


ஆன்மிக அதிரடி ஆனந்தப் பயணத்திற்கு நித்தியானந்தா டிராவல்ஸ்.!

No comments:

Post a Comment